பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கம்பர் முன்னை நூல்களின் அமைப்புகளைக் கம்பர் போற்றிக் கொண்டிருப்பினும் போற்றிக் கொண்ட திறங்களில் புதுமை காண்கின்றோம். மேலும் புதுத் திறங்களைப் படைத்துக் கொண்டிருக்கவும் காண்கின்றோம். பல காப்பியங்களுக்குப் பின் தாம் ஒரு பெருங்காப்பியம் ஆக்கிப் புகழை வாரிக் கொண்டார் கம்பர் என்றால் அவரது நிகரற்ற படைப்பாற்றலுக்கு அஃது ஒரு சான்று இல்லையா? கம்பரைப் போல் விரிவாற்றலும் படைப்பாற்றலும் உடையாரை யாம் கண்டிலம். கம்பரைப் போல் காப்பிய வனப்புக்கள் பல காட்டினாரை யாம் கண்டிலம். கம்பர் காப்பிய வழிகாட்டி. பிறமொழி இலக்கியங்களை மேற்கொள்ளுங் காலை எங்ங்னம் மாற்றலாம், கொள்ளலாம் என்று காட்டும் விதிகாட்டி. வழிகாட்டி தமிழிற் காப்பியங்கள் பல இருந்தாலும் நாட்டுக் காப்பியங்கள் என்ற வரிசைக்கு உரியன மூன்றே. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம் என்ற மூன்றும் செந்தமிழ் நிலத்துப் பிறந்த மாந்தர்களைக் காப்பிய மாந்தர்களாக உடையன. நிலக் காப்பியங்கள் என்ற தனிச் சிறப்புக்கு உரியன. ஆனால் ஒரு மொழிக்கு நிலக் காப்பியங்களே தோன்ற் முடியுமா? மொழியின் பரந்த வளர்ச்சிக்குத் தழுவலும் வேண்டும். அத் தழுவல் தழுவலாகத் தெரியாது நிலத்தோடும் நிலமக்கள் மரபோடும் ஒட்டவேண்டும். ஒட்டாத் தழுவல்கள் உணர்ச்சியும் விளைக்கா; மக்களிடையும் பரவா. டிொழி பெயர்த்து அதற்பட யாத்தல் என்றார் தொல்காப்பியர். அதற்படஎன்பது ஆழ்ந்த பொருள் உடையது.மொழிபெயர்ப்பு என்பது தோன்றாதபடி வேண்டிய Լյ து தோனறாதபடி ليزt سہ ------سٹ .......... வெல்லாம் செய்க என்பது கருத்து. கம்பர்.காப்பியம் கதையால் தழுவலர்யினும், மொழியாலும் நடையாலும் பண்பாலும் உணர்ச்சியாலும் அன்பாலும் தமிழ் மண்ணிற் பிறந்த நிலக்காப்பியம் ஆகும். மொழி பெயர்ப்புக் காப்பியத்தை மொழிபிறப்புக் காப்பியமாகவே உருவாக்கி அருளிய திறம் கம்பரிடத்துப் போல் பிறரிடம் காண முடியுமா? 'முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவேன்' என்னும்போது தமிழன்பும், வண்டு தமிழ்ப்பாட் டிசைக்கும் தாமரையே என்னும் போது தமிழ் என்ற சொல்லில் பற்றும், 'சான்றோர். கவியெனக் கிடந்த கோதாவரி என்னும் போது பழஞ் சங்கப்புலவர்பால் ஈடுபாடும், காவிரி நாடன்ன கழனி நாடு' என்னும்போது நாட்டன்பும், 'முல்லையைக் குறிஞ்சியாக்கி மருதத்தை முல்லையாக்கி என்னும்போது தமிழ்க் காட்சியும்,