பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 59 "சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே என்னும் போது தமிழ்ப் பிறப்பும் இவ்வாறே தமிழ் மக்களின் அகவழக்கங்களும் புறப்பழக்கங்களும் இராமாயணக் காப்பியத்து மலிந்து கிடக்கின்றன. தொல்காப்பியம், சங்கவிலக்கியம், திருக்குறள், சீவகசிந்தாமணி, திவ்விய பிரபந்தம் முதலான நூல்கள் இராமாயணத்தைச் சொல்லாலும் பொருளாலும் இயக்கி உள்ளன. கதைக்கு வடமொழி மூலமாக இருந்தாலும் கதை மேல் எழுந்த காப்பியக் கட்டிடத்துக்குத் தமிழே மூலமாகும். தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல், என்று தொல்காப்பியத்துக்கு மொழிந்த அடிப்படை இராமாயணத்துக்கும் பொருந்தும் என்று யான் கூறுவதைப் பலர் வரவேற்பர் என்று நம்புகிறேன். - பொருள் பெயர்ப்பு மொழி வளர்ச்சிக்குக் கம்பர் பெருமான் பல துறையில் வழிகாட்டி, கம்பர் தமிழ் மொழியைப் பொருளாலும் வளர்த்தார். சொல்லாலும் வளர்த்தார். பிறமொழியில் உள்ள பெயர்களை எப்படித் தமிழ்ப் படுத்துவது? பிற மொழி ஒலிகளையும் அப்படியே தழுவிக் கொள்ளலாமா? அப்பெயர்களைக் கிடந்தாங்கே கொள்ளலாமா? பொருள் கண்டு மொழிபெயர்த்துக் கொள்ளலாமா? என்று நாம் வாதாடுகின்றோம். ஆளுக்கு ஒரு முறையாக மனம்போன போக்கில் எழுதுகின்றோம். வடமொழிப் பெயர்கள், வடசொற்கள் இடைக்காலத் தமிழ் இலக்கியங்களில் ஏராளமாக வந்துள்ளன. நம் முன்னோர்கள் வடசொற்கிளவிகளைத் தமிழ் ஒலிக்குஉட்பட்டும், எழுத்து மயக்க முறைக்கு உட்பட்டும் போற்றிக் கொண்டனர். சில பல இடங்களில் பொருள் பற்றியும் ஆக்கிக் கொண்டனர். கிரெளஞ்ச மலையைச் 'குருகொடு பெயர் பெற்ற மால்வரை (பரிபாடல்.5) எனவும், திருதராட்டிரனை வியக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் (கலி. 25) எனவும், சங்க நூல்கள் மொழிபெயர்த்து அதற்பட யாத்திருத்தலை அறிகின்றோம்.