பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கம்பர் தொன்னூல்களில் வடசொல் வரவு மிகமிகக் குறைவு. கம்பர் காலம் வடமொழிக் கலப்பு மிகுந்த காலம் எனினும் தமிழ் ஒலிவரம்பும் மயக்கவரம்பும் பெரும் புலவர்களால் புறநடையின்றிப் போற்றப்பட்டடன. அங்ங்ணம் போற்றியவருள் புலமை மிக்கவர் கம்பர். இராமாயணப் பாத்திரங்களை எள்ளளவும் தமிழ் மொழிமை குன்றாது செய்யுட்படுத்தினார்; இராமன், இலக்குவன், அநுமன், சுக்கிரீவன், கும்பகருணன், வீடணன், இரணியன் என்றவாறு முதலிடையிறுதி எழுத்துக்களை இலக்கணம் பொருந்த ஆண்டார்; வச்சிர தந்தனை 'வச்சிரத் தெயிற்றவன்' எனவும், மகாபார்சுவனை 'மாபெரும் பக்கன் எனவும் சூரிய சத்துருவைச் சூரியன் பகைஞன் எனவும், துரமிராட்சனைப் புகை நிறக் கண்ணன் இரணியாட்சனைப் 'பொன்கணான் எனவும், இரணியனைக் கனகன் எனவும், மகராட்சனை மகரக் கண்ணன் எனவும் பிறமொழிப் பெயர்களைக் கம்பர் பொருள் பெயர்த்துள்ளார். பொன் மலையைக் கோல்டன் ராக்கு என்று ஆங்கிலப் படுத்தும்போது, கோல்டு சிமித்து என்ற பெயரைப் பொற்கொல்லர் என்று ஏன் பொருள் பற்றித் தமிழ்ப் படுத்தலாகாது? இந்நெறி கம்பர் முதலான நம் முன்னோர்கள் காட்டிய வழியில்லையா? என்று வினவத் தோன்றுகின்றது எனக்கு. களம் இன்று சொற்பொழிய வேண்டிய தலைப்பு காப்பியக் களங்க்ள் என்பது. இத்தலைப்பிற் பேசுவதற்குமுன் இதுகாறும் கம்பரின் அருமை பெருமைகளை ஒரு முன்னுரையாக மொழிந்தேன்; எவ்வகைக்கும் இவர் ஒரு வழிகாட்டி என்பதனை எடுத்துக் காட்டினேன். ஆசிரியனிடத்து ஈடுபாடு இல்லாவிட்டால் அவன் நூலை ஆழ்ந்து கற்கும் ஆசை தோன்றாதல்லவா? உயிர்வாழ்வு நிலையாதது; வாழ்வின் வளங்கள் நிலையாதவை. யார் வாழ்வு எவ்வளவு தொலை ஒடும் என்பது யார்க்குத் தெரியும்? எவன்.எவ்வளவு காலம் செல்வனாக இருப்பான் என்பது எவர்க்குத் தெரியும்? உயிர் நின்றபின் இருந்த வயதைக் கணிக்கின்றோம்; ஏழையாகிய பின் இருந்த வாழ்வைக் கணக்கெடுக்கின்றோம். குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் என்றபடி பிறப்பின் வகை எத்தனை? பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று என்றபடி, இறப்பின் வகை எத்தனை? 'பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லா உலகம்' என்றார் தொல்காப்பியர். இத்தகைய மன்னா உலகத்து, நீண்ட பெருங்காப்பியம் எப்படிப் படைப்பது? உலக நிகழ்ச்சிகள் அற்றற்று ஒழுகுவன ஆதலின் புறநானூறு போலப்