பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 61 பெரும்பாலும் தனிப்பாடலுக்கே உரியன. பெருங்காப்பியத்துக்கு வேண்டிய அறாவாழ்க்கையே யாரொருவரிடத்துக் காண முடியும்? அரிய பல நிகழ்ச்சிகளின் தொகுப்பை யாரிடத்துக் காண முடியும்? குன்றின் அனையவர் வாழ்க்கையும் திடீரெனக் குன்றிவிடும். ஒரு பொழுதும் வாழ்வது அறியாத மானிட வாழ்க்கையைக் காப்பியம் ஆக்குவது எளிதன்று. நிலையாத வாழ்வுக்கு ஒரு நிலைத்தன்மை செய்வது காப்பியம். ஒவ்வொரு கட்டத்திலும் நிலையாத தன்மையைப் புலவன் எங்ங்னம் ஈடுகட்டுகின்றான்? அறுவது போன்ற இடத்தில் இலக்கியச் சூழ்ச்சி செய்து அறாதபடி எங்ங்னம் காப்பியத்தை ஒட்டுகின்றான்? இத்தகைய களங்களில் புலவனது காப்பியத் திறத்தைக் காணவேண்டும்; காப்பியத் துணிவைக் காணவேண்டும். பரதனும் இராமனும் சித்திரகூட மலையில் பரதனும் இராமனும் சந்திக்கும் களம். இருவரும் நிகரற்ற நல்லவர்கள். இராமன் பெருமைக்கு எடுத்துக்காட்டு வேண்டியதில்லை. எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த வள்ளலையே அனையானை' என்று இராமனுக்குச் சமமாகப் பரதனைப் பாராட்டுகின்றான். விசுவாமித்திரன். 'கொள்ளான் நின்சேய்' எனத் தயரதனும் பரதன் பண்பை மதிக்கின்றான். 'மும்மையின் நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால் குறைவிலன் என்று இராமன் தாய் பரதனை அளவு கடந்து புகழ்கின்றாள். ஆளான் பரதன் அரசு என்று ஊர் போற்றுகின்றது. ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா என்று குகன் பரதனை நிகரின்றிப் போற்றுகின்றான். எத்தாயர் வயிற்றினும் பின்பிறந்தார்கள் எல்லாம் ஒத்தாற் பரதன் பெரிது உத்தமனாதல் உண்டோ என்று இராமன் எடுத்துக் காட்டுகின்றான். இத்தகைய நீதிக் கடலான பரதனுக்கும் அறக் கடவுளான இராமனுக்கும் கருத்துப் பூசல் ஏற்படும் என்றால், அதனை முடிப்பது எப்படி? நன்மைக்கும் தீமைக்கும் பூசல் என்றால் எளிதில் தீர்க்கலாம். இயல்பான நலங்களுக்கு இடையே போட்டி என்றாலுங்கூடத் தீர்ப்பது எளிது. தன்னிகரில்லா இரு நன்மைகள் தம்முட் போராட்டம் என்றால் எதனை விலக்குவது? எதனை வெல்லச் செய்வது? இராமன்தந்தையின் வாய்மை காக்கப்பாடுபடுகின்றான். தவக்கோலம் பூண்டு வனம் புகுகின்றான். பரதனோ அரசமுறை காக்க முனைகின்றான்; தவவேடந் தாங்கி வனத்துக்கு வந்திருக்கின்றான். முறை எதுவாயினும் தந்தையை மதிக்கின்றான் இராமன். தந்தையினும் வழிமுறையை மதிக்கின்றான் பரதன்.