பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கம்பர் தந்தையின் செய்கை சரியன்று என்பது அவன் தெளிவான கருத்து. 'முழுதுலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் வழுவினன் அதனை நீக்க மன்னனைக் கொணர்வான் வந்தேன் என்று குகனிடம் தந்தையின் தவற்றை வெளிப்படுத்துகின்றான் பரதன. உந்தை தீமையும் உலகு றாதநோய் தந்த தீவினைத் தாய்செய் தீமையும் எந்த்ை நீங்கமீண் டரசு செய்கெனாச் சிந்தை யாவதும் தெரியக் கூறினான். "தந்தையும் தாயும் அரசியலில் பெரும்பிழை செய்து விட்டனர்; அது நீங்கவேண்டும் எனின் நீ வந்து மீண்டும் அரசேற்க வேண்டும். நீ அரசு ஏலாதவரை அத்தீமை இருக்கவே செய்யும் என்று இராமன் முன்னர் தன் உள்ளக் கருத்தை ஒளியாது கூறினான் பரதன். யார் செய்தால் நமக்கென்ன? செய்தது அறமா என்று பார்ப்பதே முறை என்பது பரதன் குறிக்கோள். வீடணனும் இக்குறிக்கோள் உடையவனே. 'தீயவை செய்வராகின் சிறந்தவர் பிறந்தவுற்றார் தாயவைதந்தைமார் என்று உணர்வரோதருமம் பார்ப்போர் என்பது தானே இராமாயண நெறி. கொற்றவனாயினும் குற்றம் குற்றமே என்ற பரதன் இராமாயண நக்கீரன் அல்லவா? அவன் குற்றச்சாட்டுக்கு நேர்மையான மறுப்பு யார் கூறமுடியும்? தனைய ராயினர் தந்தை தாயரை வினையின் நல்லதோர் இசையை வேய்தலோ நினையல் ஒவிடா நெடிய வன்பழி புனைதலோவைய புதல்வர் ஆதல்தான். புதல்வன் கடன் என்ன? தாய் தந்தைக்குப் புகழ் சூடுவதா? பழி புனைவதா? என்பது இராமன் மறுமொழி. முறை என்பது தனியாக ஒன்றில்லை. அரசன் ஏவியது எது அதுவே முறை என்பது அவன் குறிக்கோள். தாய் வரங்கொளத் தந்தை ஏவலால் மேய நங்குலத் தருமம் மேவினேன் என்று தன் அறநெறியை இயம்புகின்றான் இராமன். தந்தை வரங்கொடுத்தது சரியா? பிழையா? என்பது இராமனுக்குக் கருத்தன்று. நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கோர் நாயகமே என்ற திருவாசகத்தின்படி ஆராய்ச்சியின்றி அடிபணிவதே இராம நெறி. பரதநெறி சரியா? இராமநெறி சரியா? இரு நெறிகளும் குழப்பம் அற்றவை. உலகிற்கு இன்றியமையாதவை. இந்நெறிகள் யார் ஒருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு களத்துக் காணப்படுபவை. மேலும் நெறிகளின் சிறப்பு,