பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - 63 அந்நெறிகளைப் பின் பற்றுவார் சிறப்பைப் பொறுத்தது. இராமாயணத்து நிகரற்ற நல்லவர் இருவர்க்கிடையே நெறிப்பூசலைக் காண்கின்றோம். ஒன்றொழித்து ஒன்றைச் சிறந்தது என்று சொல்ல முடியாது கம்பருக்கு இக்கட்டான காப்பியக் கட்டம். பரதனுக்கும் இராமனுக்கும் பலத்த சொற்போர் நிகழ்கின்றது. கற்பு நீங்கிய மகளிரைக் காட்டிலும் பொறுமை நீங்கிய தவத்தைக் காட்டிலும், அருள் நீங்கிய அறத்தைக் காட்டிலும் முறை நீங்கிய அரசு கொடியது எனவும், அறத்தைக்கொன்று தின்றுவிட்டு அரசு ஆள்வேனா எனவும் சினக்கின்றான் பரதன். அரசு நின்னுடையது. ஆள்க என்று இராமன் மொழிந்தபோது என்னதாகில் யான் இன்று தந்தெனன்; மன்ன போந்து நீ மகுடஞ்சூடு என்று மடக்குகின்றான் பரதன். ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அண்ணன் சொல்லுக்கு மறுமொழி பேசக் கூடாதே என்று இக்கருத்தில் பரதன் அடங்கி இருப்பதாகவும் இல்லை. பரதன் துணிவைப் பார்த்தான் வசிட்டன். இராமனை நோக்கி 'என்ஆணை: நீ திரும்பச் சென்று அரசாள் என்று கட்டனை இட்டான். அண்ணன் வேண்டுகோளைத் தம்பி மறுக்கும் களம் இது. முனிவர்களையே காக்கப் பிறந்த இராமன், வசிட்டன் கட்டளையைப் புறக்கணிக்கும் களம் இது. முன்னே பணித்த தாய்தந்தையரின் கட்டளையைத் தலைமேற்கொண்டு நிறைவேற்றுவதாக வந்தேன். நீரோ பின்வாங்கும்படி கட்டளை இடுகின்றீர். செய்யத் தக்கதைச் சொல்மின் என இராமன் வசிட்டனையும் குற்றம்படப் பேசுகின்றான். யார் இப்போது யார்க்குச் சொல்வது? யார் சொல்லையும் எவரும் கேட்க முடியாத அறக்களம் இது. முனிவனும் உரைப்பதோர்முறைமை கண்டிலம் இனியென இருந்தன்ன் இளைய மைந்தனும் அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடுநான் - பனிபடர் காடுடன் படர்தல் மெய்யென்றான். .. ... . . .רי-'י இராமன் உறுதி கண்டபின் வசிட்ட முனிவனும் வாளா இருந்தான். இராமனும் மேற்பேசவில்லை. பரதன் யாரும் அஞ்சும் ஒரு முடிவுக்கு வந்தான். இதுவரை முன்னிலையாகப் பேசியவன் இப்பொழுது முன்னிலைப் புறமொழியாகப் பேசத் தொடங்கினான்; 'இதுதான் போக்கென்றால், நாடுகிடக்க: வேண்டுவார் அதனை ஆண்டு கொள்ளட்டும். நான் இராமனுடன் காட்டில் வாழ்வேன். இதுவே உறுதி என்று முடித்தான் பரதன்.