பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - 65 தம்மை மோதவிட்டால் அம்மோதுதலை ஈடுபட்டு விலக்குவார் நசுங்கிவிடுவார். அவ்விரு தலைமையும் விலக்குவாரின்றிப் 'பொருது நசுங்கும். தாமே உணர்ந்து பொராது விலகிக் கொண்டன என்று கம்பர் ஒரு பாட்டு எழுதுவது உணர்ச்சி வழுக்கலாகும், தாம் கூறுவது காப்பியச் சுவையாகாது என்ற கருத்தால், தேவர்மேல் ஏற்றிக் காப்பியத்தை ஒட்டுகின்றார் கம்பர். - இராமன் பரதன் இருவருடைய துணிவையும் ஆராய்ந்தார்கள் தேவர்கள். பரதன் துணிவே பெரிதென்று அவர்களுக்குப் பட்டது. பரதன் திருப்பிச் செல்ல்ாவிட்டால் தந்தை ஆண்ட நாடு அவலப்படுமே என்று இரக்கங் கொண்டு, இராமன் அயோத்திக்குத் திரும்பிச் செல்லக்கூடும் என்று.அவர்களுக்குத் தோன்றியது. மேலும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று எண்ணினர். தந்தை சொற்படி, இராமன் வனஞ் செல்வான். அப்பதினான்கு ஆண்டும் அரசைக்காத்தல் உன் கடன் என்ற வானொலி பிறந்தது. களத்திற்கு வழி ஏற்பட்டது. பரதன் உறுதி கேட்டு மனம் நெகிழ்ந்த இராமனுக்குப் புதிய துணிவு உண்டாயிற்று. பற்றுக்கோடு கிடைத்தது. வானவர் உரைத்தலும் மறுக்கற் பாலதன்று என்று விட்ட பேச்சைத் தொடங்குகின்றான் இராமன். வாய்மை காக்க நான் வனத்தில் இருப்பேன் என்று முன் பேசியது போல் பேசாது, பரதன் துணிவையும் நெறியையும் விளங்கிக் கொண்டு 'யான் உனை இரந்தனன் என்று மன்றாடுகின்றான்; பரதனது மலர்த் தடக்கை பற்றி அணைக்கின்றான். இன்ன திடீர் மாறுபாட்டைத் தேவரைக் கொண்டு செய்விக்கின்றார் காப்பியப் புலவர். இது காப்பிய வழுவமைதியாகும். புலவரே செய்யின் காப்பிய வழுவாகும். காப்பியம் என்பது ஓராற்றால் உலகப்படி உலகத்து எவ்வளவு மோதுதல் உள, அவ்வளவு காப்பியத்தும் உள. உளவாம்பாடி புலவன் பார்த்துக் கொள்ளவேண்டும். மோதுவதற்கு ஏற்ற வாய்ப்பிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முன்னரே வேறுபட்டவர்கள் முரணுவதில் காப்பிய எழுச்சி தோன்றாது. இராமனும் இராவணனும், இலக்குவனும் மேகநாதனும் சந்திக்கும் களங்கள் எதிர்பார்க்கும் களங்களேயாகும். உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா, உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்றபடி, மிக நெருங்கியவர்கள் தம்முள் வரும் போராட்டமே புலவன் ஈடுகட்டுதற்கு அரியவை; ஈடுகட்டி நாட்ட வேண்டியவை. சில சமயங்களில் புலவனுக்குத் தலைமைப் பாத்திரங்களில் பேரன்பு ஏற்பட்டு விடுகின்றது. அந்த அன்பு குன்றிவிடுமோ என்று அஞ்சித் தலைமைப் பாத்திரங்களைப் பெரு மோதுகையின்றிப் பார்த்துக் to. So. - -