பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - t - கம்பர் கொள்கின்றான்; மன்னாயத்தின் பெருமதிப்போடு காட்ட விரும்புகின்றான். சீதையை இராவணன் கையில் தீண்டி எடுத்து மடியில் வைத்துத் தேர்மேல் கொண்டு சென்றான் என்பர் வான்மீகர். தலைமைப் பாத்திரமான சீதையின் மேனி மேல் கயவன் கைபட்டது என்று கூறுவது கம்பர் மனதுக்கு ஏற்றமாகப் படவில்லை. அவள் இருந்த நிலத்தோடு தோண்டிக் கொண்டு சென்று அசோகவனத்தில் வைத்தான் என்று புதுப்பித்தார். இவ்வளவு கூடச் சொல்லத் துளசிப் பெரியாருக்கு மனம் இயையவில்லை. இராவணன்தூக்கிச் சென்றது மாயா சீதையையே என்று பெருமாற்றஞ் செய்தார். இத்தகைய மாறுதல்கள் அன்பு நோக்கி எழுந்தன. இப்படியே செய்துகொண்டு போனால் புலவன் அறிவுக்கு வேலையில்லை. காப்பிய உணர்ச்சிகளின் போராட்டத்துக்கு இடமில்லை. போராட்டக் களம் குன்றியபோதுகாப்பிய நீட்டத்துக்கும் இடமில்லை. தயரதனும் கைகேசியும் - உறவுகளில் சிறந்தது காதலுறவு, கணவன் மனைவி என்ற உறவு. வேறுவேறு இடத்திற் பிறந்து இருபது இருபத்தைந்தாண்டு தனியாக வளர்ந்த இருவர் ஒரு நாள் திருமணத்தால் ஒன்று கூடுகின்றனர். தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே என்றார் திருக்கோவையார். இவ்வுறவு தெய்வத் தன்மையுடையது என்பது நம் முன்னோர் கொள்கை. இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் என் கணவனை யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே என்று கூறுகின்றாள் ஒரு குறுந்தொகைத் தலைவி. கணவன் மனைவி என்ற உறவு பிறவிதோறும் இடையறாது வரும் வழிவழித் தொடர்பு என்று கொண்டு மணிமேகலை முதலான காப்பியக் கதைகள் எழுந்துள்ளன. கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப் போய் பிரிந்தவர் கூடினாற் பேசவேண்டுமோ என்றபடி, இராமன் சீதையுறவும் பழம் பிறப்புத் தொடர்பாகும். தொல்காப்பியமும் அகத்திணை இலக்கியங்களும் காதற் பிணைப்பைப் பலதுறையால் வலியுறுத்துவ. இன்ன அழகிய அன்புறவு இராமாயணக் கதையில் இழுக்குப் படுகின்றது. தயரதன் . மண்ணாள் கின்றாராகிவலத்தால் மதியால்வைத்து எண்ணா நின்றார் யாரையும் எல்லா இகலாலும் விண்ணோர் காறும் வென்ற எனக்கென் மனைவாழும் பெண்ணால் வந்த தந்தரம் என்னப்பெறுவேனோ.