பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் l 67 கைகேயி ஆழிப் பொற்றேர் மன்னவன் இவ்வாறயர்வெய்திப் பூழிப் பொற்றோள் முற்றும் அடங்கப் புரள்போழ்தில் ஊழிற் பெற்றால் என்னுரை யின்றேல் உயிர்மாய்வேன் பாழிப் பொற்றார் மன்னவ என்றாள் பசையற்றாள். கைகேயி சூழ்வினைப் படலம் இராமாயணத்து ஒரு பெரிய காப்பியக்களம். தயரதனுக்குத் தான் பெற்ற மக்கள் நால்வருள் ஒருவன்மேல் உயிர்க் காதல். அதனால் உயிர் விடுகின்றான். கைகேயிக்குத் தான் பெற்ற ஒரு மகன் அரசாளவேண்டும் என்ற தனிக்காதல்; அதனால் கணவர் உயிர் விடுவதையும் வரவேற்கின்றாள். மக்கள்மேற் காதலால் இல்லறச் சகடம் குடஞ் சாய்கின்றது. இராமனுக்கு முடிசூட்டித் துறவுபூண எண்ணிய தயரதன் செய்கை என்னவாயிற்று? இராமனைத் துறவியாக்கிற்று. பேராற்றல் உடைய இவ்வுலக மன்னரையும் அவ்வுலக மன்னரையும் வென்ற எனக்கு, ஒரு பெண்ணால் அதுவும் உயிரென்று கூறும் என் மனைவியால் அழிவு வந்தது என உலகம் கூறுமாறு ஆயிற்றே" என்று அழுது புரண்டு புலம்பி மயங்கிப் புழுதிபடத் தேய்கின்றான்.தயரதன். அவன்.அவலக் கொந்தளிப்புக்கு எல்லையில்லை. அருகிருக்கும் மனைவி கைகேயி சிறிதும் பதற்றப்படாது, நெஞ்சு கிஞ்சிற்றும் துடிக்காது, மாணவர்கள் வர்ப்பண்ணிப் பேசுவது போல, நான் கேட்டபடி கிடைத்தால் வாழ்வேன்: இல்லாவிட்டால் மன்னவனே தெரிந்து கொள், உயிரை உனக்கு முன் விடுவேன் என்று கூனி சொல்லிக் கொடுத்த விடையை ஒப்பித்தாள். மேலும் ஒரு மேற்கொள் விளம்பினாள். உண்மைக்காக உன் குலத்துப் பிறந்த சிபி மன்னன் தன் தசையையும் அரிந்து கொடுக்கிவில்லையா? என்று கேட்டாள். நீ உயிர் விடுவது பற்றிக் கவலையில்லை என்பது கைகேசியின் குறிப்பு. ஒழுக்க நாடு முடிசூட்டுக்கு முதல் நாள் இரவு கைகேசியின் அரண்மனையில் உலகப் பெருங்காப்பியம் எழுதற்கு உரிய ஒரு களம் நிகழக் காண்கின்றோம். சிறந்த குணங்கள் திடீரென்று தம்முள் மலையத் தொடங்கி விட்டன. ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய போராட்ட மன்று இது, அரசனுக்கும் அரசிக்கும் உரிய போராட்டமன்று இது; கணவனுக்கும் மனைவிக்கும் உரியபோராட்டமே இது. குடும்பப் போராட்டமே இது. ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை; விட்டுக் கொடுக்கும் சூழ்நிலையும் இல்லை. நல்லவை இரண்டு பிடிவாதமாகப் போராடினால் இரண்டும் அழிவது தவிர 冷 ණු