பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 69 பின்முன் என்பன இல்லை. ஏன்? எழுதிய அனைத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பான்; முன்பின் ஒட்டமும் பாத்திரப் பேச்சும் கவிக் கூற்றும் பெருமுரணாகாதவாறு ஒழுங்கு செய்திருப்பான்; முழுப் பக்குவமே அவன் புலமை நோக்கம். புலவன் படைத்த தடத்திலேயே நாம் சென்று பார்க்கவேண்டும். 'தீயவை யாவினும் சிறந்த தீயாள் எனவும், இன்னுயிர் உண்ணும் எரியன்னாள். எனவும் கவிஞரே கைகேசியை வைதாலும், அவள் ஒழுக்கத்தை அவர் குற்றங் கூறியதில்லை. தீண்டலும் உணர்ந்த அத்தெய்வக் கற்பினாள் என்று பாராட்டுகின்றார் கம்பர். பின் விளையப் போவதைத் தெரிந்த கம்பர்தான் 'தெய்வக் கற்பினாள் என்று பாராட்டுகின்றார். கோசலைக்கும், சுமித்திரைக்கும் கூட இத்தெய்வப் பாராட்டு மொழியவில்லை. தீயமந்தரை இவ்வுரை செப்பலும் தேவி தூய சிந்தையும் திரிந்தது என்று கைகேசியின் சார்பாகப் பேசுகின்றார் கம்பர். அவள் சிந்தை திரிந்ததற்கு மந்தரை வெளிப்பட்ட காரணமாக இருந்தாலும் மறைமுகக் காரணங்கள் இரண்டு உள. அவை தேவர் பெற்ற வரம். அந்தணர் இயற்றிய அருந்தவம் என்பர் கம்பர். கைகேசி இயல்பிற் கொடியவள் இல்லை. அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் அவளைக் கொடியவள் ஆக்கின. கோவலன் ஊழ்வினைக்குப் பாண்டியன் பலியானது போல, அரக்கர் அழிவுக்குக் கைகேயி பலிப்படுகின்றாள். இவ்வுண்மை தெரிந்தவர்கள் அவளைக் கொண்டாடாவிட்டாலும் குறை கூறார்கள். பரதன் அரசேற்க மறுத்தபின், திரிந்த அவள் சிந்தை தூயதாகிவிட்டது. இராமனை அழைத்துவரப் பரதன் சென்ற போது கைகேசியும் உடன் செல்லவில்லையா? இடரிலா முகத்தாளை அறிந்திலையேல் இந்நின்றாள் என்னை ஈன்றாள் என்று பரதன் கைகேசியைப் பரதன் குகனுக்கு அறிமுகப் படுத்தும்போது அடக்கமாக அவள் இருக்கவில்லையா? இராமாயணப் பாத்திரங்களில் சிறந்த ஆண் பாத்திரம் இராமன். சிறந்த பெண் பாத்திரம் சீதை. இவ்விருவரும் கைகேசியை ஒருபோதும் குறை கூறியதில்லை. "சிறக்கும் மாமியார் மூவர்க்கும் சீதை ஆண்டு இறக்கின்றாள் தொழுதாள் என்று செய்தி சொல்லுமாறு அநுமனை அசோகவனத்து வேண்டுகின்றாள் சீதை. கைகயன் தனயை முந்தக் காலுறப் பணிந்து மற்றை மொய்குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்குஞ் செங்கண்