பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 71 அடைபட்டுக் கிடக்கும். கைகேசி இராமனை அயோத்தியினின்று போகச் செய்தாள். அதனால் அவன் புகழ் எங்கும் பரவியது. வாழ்க்கை நீண்டது. காப்பியத்துக்கு வேண்டும் நீட்டிப்பு கிடைத்தது. படல உணர்ச்சிகள் ஒவ்வொரு போராட்டத்துக்கும் நல்லதுதான் வெல்லவேண்டும் என்பது நம் ஆசையென்றாலும் அவரவர் ஆசைப்படி உலகம் நடக்குமா? நல்லதே வென்று கொண்டு சென்றால், காப்பியம் வளருமா? தீமை உச்ச நிலைக்குச் சென்று விட்டாலோ காப்பியம் ஓடாது. நன்மையும் தீமையும் சகடக்கால்போல் சுழலும் போதுதான் காப்பிய இயக்கத்துக்கு வாய்ப்பு உண்டு. இராமாயணப் படலங்களை இந்த நோக்கில் ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு படலத்துக்கும் ஒரு போராட்டம்; ஒவ்வொரு படலமும் ஒரு களம். ஒரு களத்தில் நன்மை வெல்லும். மறுகளத்தில் தீமை வெல்லும். அப்போதுதானே காப்பியம் கவர்ச்சியாக இருப்பதோடு வளர்ச்சியாகவும் இருக்கும். அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது இராமாயண் நீதியாயினும், ஒவ்வொரு களத்தும் இந்நீதியைக் காண முடியாது. ஒரேயடியான நீதி காப்பியத்தைக் குறுக்கிவிடும். உலகியலை ஒழித்து விடும். ஆதலின் கைகேசியின் சூழ்வினைப் படலத்துக் கூனியின் சூழ்வினையே வென்றது. கைகேசி கணவனைக் கொன்ற கயத்தியானாள். தான் எண்ணியதைச் சாதிப்பதற்கு ஒரு பெண் கணவனையும் உயிர்வாங்கத் தயங்காள். தன் தாலி அறுவதையும் பொருட்படுத்தாள் என்று காட்டும் கொடுங்களம் இது. இக்களத்தில் காப்பியம் கணவனைக் கொன்றுதான் நீள வேண்டியதிருக்கின்றது. இப்படிச் செய்கின்றாரே புலவர் என்று அவரைப் பழிக்கப் புறப்படாதீர்கள். அங்ங்னம் செய்யும்படி அவரைத்துாண்டுவது காப்பிய இலக்கியம். பெரு மரங்களை அழிக்காமல் மாளிகை கட்ட முடியுமா? நிலத்தை அகழாமல் செய்யாறு காண முடியுமா? கைகேசி காப்பியப்பலி. அப்பலிதான் காப்பியது உரன். அவ்வுரன்தான். இராமன் புகழுக்கு இட்ட வித்து. - காப்பியம் எப்படி நடக்க வேண்டும் என்று விதிக்காதீர்கள். எப்படியெல்லாம் நடத்துகின்றார் என்பதைப் பாருங்கள். காப்பிய நடப்புக்காக என்னென்ன எல்லாம் புலவர் செய்ய வேண்டியுள்ளது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். முழுவமைப்பைப் பாராமல் தனிப் பாடல்களையே பார்த்துக் கொண்டிருந்தால், தமிழ் மொழிக்கண் புதுக் காப்பியங்கள் தோன்ற முடியுமா? படைக்கும் நோக்கத்தோடு பார்வை வேண்டும். சென்ற கால நூல்களையே