பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - கம்பர் போற்றிக் கொண்டு காலந்தள்ள நினைத்தலாகாது. . தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெரியபுராணம், இராமாயணம், நன்னூல் போன்றவற்றைக் கற்றுத் திளைத்துக் கற்பிப்பதோடு அமையாது, அவற்றின் அமைப்புக்களை வாங்கிக் கொண்டு தமிழ்ப் புத்துலகத்தைப் படைக்கவும் முயல வேண்டும்; ஒரு சிலருக்காவது இலக்கிய நோக்கு எதிர்கால நோக்காக இருத்தல்வேண்டும். நாலுகோடி மக்கள் கொண்ட தமிழுக்குப் படைக்குநர் நாற்பதின்மர் இருந்தாற் போதும். இன்று நாம் கற்கு முறை, கற்பிக்கும் முறையெல்லாம் அறிதற் பயனேயன்றி ஆக்கப்பயனில்லை. நோக்கம் ஆக்கமாக இல்லாத போது, பெருநூல்கள் எங்ங்னம் பிறக்கும்? 'கம்பநாடனுடன் கவிதை போயிற்று' என்றார் பாரதியார். இப்படி முற்றுப்புள்ளி சொல்லுமாறு ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மொழியின் போக்கு இருக்கலாமா? அமைப்பு அறிவார்க்கு எந்நூற் படைப்பும் அரியதில்லை. ஆனால் அவ்வமைப்பை அறிவதற்குச் சிந்தனைக் கால்கள் பல வேண்டும்; பரந்தும் சிந்திக்க வேண்டும்; துணிந்தும் சிந்திக்க வேண்டும்; அப்போதுதான் இது உலகியலிற் காணப்படும் நெறி, இது உலகிற்குக் காட்டவேண்டும் நெறி என்ற பகுத்துணர்வு. தோன்றும். ' .. - - பாத்திரத்தின் ஈகம் காப்பிய நீட்டத்துக்குப் புலவர் எப்பாத்திரத்தையும் துணிந்து வளைக்கின்றார். பாத்திரத்தின் ஈகம்என்று கூட இதனைக் குறிப்பிடலாம். தன் நேரில்லா இராமன் - தந்தையின் வாய்மையைத் தான் காக்கப் புறப்பட்ட இராமன் - பொய்ம்மை வேண்டிய ஒருகளம். அங்ங்ணம் வேண்டினான் என்ற சொல்ல வேண்டிய ஒரு களம் ஏற்பட்டுவிட்டது. சொல்லியபடியே மக்கள் இராமனுடன் காட்டுக்கு ஏகினர். ஏகாது அயோத்தியில் இருந்தவர் தொகை விரல்களினும் சிறிது. உடன் வந்த குடிமக்களையும் கூட அழைத்துக் கொண்டு வனம் வாழ்வதா? மக்களின் பேரன்பைக் கண்டு மதித்து இராமன் அயோத்தி திரும்புவதா? முன்னது தவத்திற்கு இழுக்காகும். பின்னது வாய்மைக்கு இழுக்காகும். நேர்முகமாக இச் சிக்கலைத் தீர்க்க முடியாது. - பூண்டபே ரன்பி னாரைப் போக்குவதரிது போக்காது ஈண்டுநின்றேகல் பொல்லாது எந்தைநீ இரதம் இன்னே