பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - 73 தூண்டினை மீள நோக்கிச் சுவட்டையோர்ந் தென்னை யங்கே மீண்டனன் என்ன மீள்வர் . இதுநின்னை வேண்டிற் றென்றான். அமைச்சன் சுமந்திரனை ஒரு சூழ்ச்சி செய்ய இராமன் வேண்டும் பாடல் இது. ‘என்னை ஏற்றி வந்த தேரை இந் நள்ளிரவில் அயோத்திப் பக்கம் திருப்புக. காலையில் விழித்தெழுந்த இம் மாந்தர்கள் அத் தடத்தைக் காண்பார்கள். இரவே நான் மீண்டும் அயோத்தி சென்று விட்டதாக எண்ணித் தாமும் திரும்பி விடுவர். இந்த ஏமாற்றத்தைச் செய்க என்று வேண்டுகின்றான் காப்பியப் பெருந்தலைவன் இராமன். இச் சூழ்ச்சி பலித்தது என்று அறிகின்றோம். இராமன் நகர் மீண்டான் என்று தேர்ச்சுவடு பார்த்து மயங்கிய குடிமக்கள் இடியும் கடலும் ஒலித்தாற் போல் ஆரவாரஞ் செய்து அயோத்தி போந்தனர் எனவும், உண்மையறிந்து உயிர் ஒழிந்தவர்போல் விம்மினர் எனவும் வசிட்டன் ஆறுதல் கூறினான் எனவும் அறிகின்றோம். இப்பொய் வாய்மையிடத்தது எனவும், புரை தீர்ந்த நன்மை பயப்பது எனவும் ஒரு சிலர் வாதாடலாம் எனினும், தன் நெஞ்சு அறிந்த பொய் என்பது வெளிப்படை. இப்புரை தீர்ந்த நன்மைதான் என்ன? கதை நீட்டிப்பு. காப்பிய ஒட்டத்துக்கு இராமனும் பொய்யனாக்கப்படுகின்றான். அவன் அங்ங்னம் ஆயினாலல்லது இந்த அன்புக் களத்தைப் புலவர் வென்று மேற் செல்லல் இயலாது. - - காப்பியக் களங்களைப் புலவன் அமைத்துச் செல்லுங்கால் அறம், அறமின்மை என்ற நீதி பொருத்தி ஆராய்தல் கூடாது. காப்பியப் பண்பு என்பது தனிப் பண்பு. அப்பண்பு காப்பிய இயக்கத்துக்கு இன்றியமையாதது. அப்படைப்புக்கு எப்பாத்திரமும் வளைந்து கொடுக்க வேண்டும். காப்பியம் செய்யும் புலவர் பெருமகனுக்குப் பாத்திரங்கள் ஓராற்றான் அடிமையானவை. களங்களின் போராட்டங்களை ஈடுகட்டும்போது சான்றோர் ஒத்துக் கொள்ளும் நெறிகளையே புலவன் தழுவவேண்டும் என்பது நீதிக்கு நேராயினும், காப்பிய நீட்சிக்கு உதவாது. நீதியான முடிவைக் காப்பியம் இறுதியில் காட்டலாமேயன்றி, நிகழ்ச்சிதோறும் நீதியை வைத்து எழுத இயலாது. காப்பியத்துப் பல நிகழ்ச்சிகள் நீட்டிப்பு. நோக்கம் உடையனவேயன்றி நீதிநோக்கம் உடையனவல்ல. இத்திறனாய்வை எக்காப்பியத்தும் பொருத்திக் காண்க உண்மை மேலும் விளங்கும். கோவலன் செய்கை தவறு என்பதைக் கண்ணகி அறிவாள், தற்காப்பேயன்றித் தற்கொண்டானைப் பேணுவதும் தன் கடன்