பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கம்பர் என்று அறிவாள்; அறிந்தும், அறிமடமும் சான்றோர்க்கு அணி என்று அடங்கியிருந்தாள். ‘வஞ்சக மாதவியுடன் களியாட்டு ஆடிக் குன்றனைய குடிச் செல்வத்தைத் தொலைத்தேன் நாணுகின்றேன் என்றவாறு கண்ணகிமுன் கோவலன் வருந்திக் கூறுகின்றானே; இவ்வமயம் கண்ணகி நல்லாளுக்கு ஒரு வாய்ப்பு அல்லவா? சென்றதற்கு வருந்தாதீர்கள், இனி இங்ங்னம் செய்யாதீர்கள் என்று கண்ணகி தன் கணவனுக்கு ஒரு நீதி சொல்லியிருக்கக் கூடாதா? மனைவி கணவனுக்கு அறங் கூறல் கற்புக்கு இழுக்கா? அங்ங்னம் அவள் கூறியிருப்பாளேல் மேற்கதை வேறு வகையாக இருக்கலாம். அறம் யாதும் கூறாது அவன் போற்றா ஒழுக்கத்துக்குத் துணை செய்பவள்போல், நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புகள் இரண்டுள, எடுத்துக் கொள்ளுங்கள் என்று இன்முகத்தோடு மொழிந்தாள். இதுவே மதுரைச் செலவுக்கும் வினை விளைவுக்கும் காரணமாயிற்று. ஊராரைக் கேட்டால், கண்ணகி செய்தது பிழையென்பார்கள்; வேண்டினவெல்லாம் கணவனுக்குக் கொடுத்தாள் என்பார்கள். இவ்விடம் காப்பிய இயக்கத்துக்கு இன்றியமையாதது என்பதை அறிபவன் புலவன் ஒருவனே. அதனாலன்றோ 'வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயாமுன் என்ற சிறந்த இடத்து, வினையை எடுத்துக் காட்டி மொழிந்தார் இளங்கோ. இராவணக் களம் இராமாயணக் காப்பியத்து இராவணன் எதிர்த் தலைவன் ஆனாலும் எள்ளிநகையாடுதற்கு உரிய சிறுமையன் இல்லை அவன். தன்நேரில்லாத் தலைமைத் தன்மை அவனுக்கும் உண்டு. இராவணன் ஏற்கனவே கயவனாக இருந்து பிறன்மனை நயந்திருந்தால் பாடுபெறுமாறு இலன். முக்கோடி வாழ்நாளும் முயன்று பெற்ற பெருந்தவமும் சிவன் வழங்கிய அரிய வரங்களும் திசையானைகளை வென்ற தேர்ள்வலியும் உடையவன் இலங்கையரசன். அத்தகைய பேராற்றல் உடையவன் இலங்கையரசன். அத்தகைய பேராற்றல் உடையவன் குற்றத்திற் கீழான பிறன் மனை நயந்தான். அவன் நயந்த மனை கற்பிற் சிறந்த சீதையாக இருந்தாள். அவள்தன் கணவன் இறைவனே அனைய இராமனாக இருந்தான். குற்றஞ் செய்தவனும் பெரியவன், குற்றமும் பெரியது. குற்றஞ் செய்த இடத்தாளும் பெரியவள், அவளுக்கு உரியவனும் பெரியவன். அதனால் இராமாயணம் ஒரு காப்பியத்துக்குத் தகுந்த பொருளாயிற்று. இந் நான்கிடங்களுள் எது சிறியதாக இருந்தாலும் காப்பியம் தோன்றாது. இக்குற்றம் சில்லறை மாந்தரிகளிடை நடந்திருந்தால் தனிப் பாடலாவது