பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 75 பிறக்குமா? ஆதலின் காப்பியத்துக் குணத் தலைவனுக்கு உரிய நன்மதிப்பு குற்றத் தலைவனுக்கும் உண்டு. ஆயிரந் தோளி னானும் வாலியும் அரிதின் ஐய மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்தமெய்ம்மை தாயினும் தொழத்தக் காள்மேல் தங்கிய காதற் றன்மை நோயும் நின்முனிவு மல்லால் வெல்வரோ நுவலற் பாலார் இராவணனது முதுகுத் தழும்பு கண்டு நாணிய இராமனுக்கு வீடணன் கூறும் ஒரு மொழி இது; அண்ணன் பெருமையை அகன்ற தம்பி நிலைநிறுத்தும் இடம் இது. தாயினும் தொழத்தக்க ஒரு பெண்ணை நயந்ததாலும், நின் சினத்தாலும் இராவணன் அழியலானான் என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தான் வீடணன், சீதையை நயப்பதற்குமுன் வேறு குற்றம் உடையவன் என்று இராவணனுக்கு ஏதும் பழியுண்டா? தேவர்களை ஏவல் கொண்ட செயலெல்லாம் தவப்பெருமையின்பாற் படுமன்றிப் பழியின்பாற் படுமா? ஊர்தேடு படத்தில் இராவணன் ஆட்சிச் சிறப்புகளை, இலங்கையைக் காணும் அநுமன் வாயிலாகப் பலபடப்பாடுகின்றார் கம்பர். அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகிக் களிக்கின்றார் அல்லால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்" என்று பாராட்டுகின்றான் அநுமன். கவலையில்லா இலங்கை என்ற ஒரு பாராட்டுப் போதுமே மன்னன் சிறப்பை அறிதற்கு.மரம் என்பது கற்பக மரம், மன்ை என்பது பொன்மனை, வேலைக்காரிகள் என்பவர் தெய்வப் பெண்கள், வேலைக்காரர்கள் என்பவர் தேவர்கள். இவ்வெல்லாம் தவத்தின் பயன் என்று விளக்குகின்றான் அநுமன். - இன்ன பெருஞ் சிறப்பும் பேராற்றலும் இயல்பில் வாய்ந்த இராவணன் தன் சிறப்பெல்லாம் அழிக்கும் ஒரு பெருங் குற்றத்துக்கு ஆளாகின்றான். ஆளாக்கினால்லது காப்பியம் இயங்காது. வரமும் தவமும் சான்ற அவனை இப்பெருங்குற்றத்துக்குத் திடீரென ஆளாக்கிவிட முடியுமா? காப்பியம் என்பது கண்கட்டு வித்தையல்லவே. இக்குற்றக் களத்தை எங்ங்னம் கம்பர் அமைக்கின்றார்: மாரீசன் வதைப் படலத்தில் இக்களத்தின் அமைப்பைக் காணலாம். சொல்லின் செல்வியாகிய