பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - கம்பர் சூர்ப்பனகையின் சூழ்ச்சித் திறத்தை இப்படலத்திற் காண்கின்றோம். மாரீசன் வதைப் படலம் என்ற பெயரைக் காட்டிலும் சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம் என்ற பெயர் இப்படலத்துக்குப் பொருத்தமாகலாம். இதனை மந்தரை சூழ்ச்சிப் படலத்தோடும் ஒப்பிடுக. - இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றுந்தன் அருந்தவம் உடைமையின் அளவில் ஆற்றலின் பொருந்திய இராவணன் புருவக் கார்முகக் கருந்தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே. தங்கையும் அவ்வழித் தலையிற் றாங்கி: செங்கையள் சோரியின் தாமரை சேந்திழி கொங்கையள் மூக்கினள் குழையில் காகிள்ை மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினள், மேற்கூறிய இரு பாடல்களின் தொடர்பு நயத்தைச் சிந்தியுங்கள். தங்கையும் அவ்வழி' என்று தொடங்கும் போதே அவ்வழி' என்பது அவள் சூழ்ச்சி முடிதற்கு ஏற்ற வழி என்பது குறிப்பிற பெறப்படும். இப்படல முதற்பாட்டின் கண்னேயே திண்ணகரிற் கடிதோடிச் சிதை தன்மை யுரைப்பனெனச் சூர்ப்பனகை வர இருந்தான், இருந்த பரிசு உரைத்தும் மன்னோ என்று கூறிவிட்டார் புலவர். இருந்த தன்மை என்ன? மூவுலகையும் வென்ற தவ இராவணன் மகளிர் கண்ணின் வெள்ளத்தில் திளைத்து இருந்தானாம் சூர்ப்பனகை வரும்போது. இக்காமச் சூழ்நிலை அவள் சூழ்ச்சி பவித்தற்கு வாய்ப்பாயிற்று. - - எத்தகைய பெரியவரையும் மிகையான காமச் சூழ்நிலை தோன்றின் சட்டெனக் கெடுத்துவிடும். அன்ன சூழ்நிலைக்கண் பிறர் தொடர்பு கொள்ளாவாறு பார்த்துக் கொண்டால் ஒருவாறு கெடுதியைத் தடுக்க முடியும். கெடுதல் செய்யத் திட்டம் இடுவோர் அத்தகைய மிகைச் சூழ்நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் வழிப் பிறந்த மன்னன். ஆனால் கோப்பெருந்தேவியின் ஊடலை உடனே தணிக்க ஆவலுற்றான். பொறுமையிழந்தான். அரசவையைத் திடீரெனக் கலைத்து அரண்மனை புக்கான். அவன் புக்க அச்சமயம் பார்த்துப் பொற்கொல்லன் தன் சூழ்ச்சியை வெளியிட்டான். காம மயக்கம் அறிவை வேலை செய்யவிடாது. அம்மயக்கத்துக்குத் துணையான போக்கிலேயே அறிவும் தாழ்ந்து வேலை செய்யும்.