பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 77 குலமுதற் றேவி கூடாதேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு கோப்பெருந்தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்தி, என்றவாறு பொற்கொல்லன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அந்தப்புரப் படிக்கட்டினின்றும் உரைக் கின்றான். அது ஏறாது என் செய்யும்? வளையாத செங்கோல் வளைவுறக் காண்கின்றோம் சிலப்பதிகாரத்து. இவ்வளவிற்கும் ஊடல் சொந்த மனைவியின்டாலது. அவ்வூடலையும் இடமும் காலமும் அறிந்து மற்றவன் பயன் படுத்தும்போது எவ்வளவோ பேரழிவு ஏற்படுகின்றது. - - இராவணன் தன் செல்வத்திற்கும் பதவிக்கும் ஏற்ற காமுகன்; ஆனால் பழிக்கத்தக்க காமுகன் என்றோ, காமக்கயவன் என்றோ எளிதில் சொல்லிவிட முடியாது. மகளிர் குழாம் சூழ இருப்பது பண்டைய அரச மரபு. அதனைப் புலவன் புனைதல் ஒர் இயல்பு. வேதவதி என்ற பெண்ணை இராவணன் கற்பழிக்க முயன்றான் எனவும், விரும்பாத மங்கையை வம்பு செய்யின் நின் தலை வெடித்துவிடும்' என்று பிரமன் அவனைச் சபித்தான் எனவும் ஒரு கதைக் குறிப்பு உண்டு. இந்நிகழ்ச்சிக்குப் பின் இராவணன் இத்தகைய தீய காமப்போக்கை விட்டுவிட்டான் என்று நம்பலாம். அரசவொழுங்கிற்கு உட்பட்டுக் காமம் துய்த்து வரும் இராவணனைப் பிறன்மனை நயக்கச் செய்வது எளிதன்று. சூர்ப்பனகையின் சூழ்ச்சி மீண்டும் அவனை அவ்வழி உய்த்துவிட்டது. அவள் சூழ்ச்சி என்ன? சீதையைப் பிரித்து இராமனைத் தான் காதலனாகப் பெறுதல். கைம்மையாகிய அவள் தன் மணவாளனாக இராமனை அடைய முயன்றாள். அம்முயற்சி பலிக்க வேண்டுமேல் சீதையைப் பிரிக்க வேண்டும் என்பது அவள் சூழ்ச்சி. - - - இரைக்குநெடுங் கடலரக்கர் இறந்ததனை மறந்தனள்போல் இராமன் துங்க - வரைப்புயத்தின் இடைக்கிடந்த பேராசை மனங்கவற்ற ஆற்றாளாகித் திரைப்பரவை பேரகழித் திண்ணகரிற் கடிதோடிச் சீதை தன்மை - உரைப்பனெனச் சூர்ப்பனகை வரவிருந்தான் இருந்த பரிசுரைத்து மன்னோ. 列