பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.." A ...' .*. است. え 78 கம்பர் உறுப்புகள் அறுபட்ட பின்னரும் இராமன்மேல் ஆசை சூர்ப்பனகைக்குப் பெருகிற்றே யன்றிப் பிற்படவில்லை. பத்தர்கள் அவன் திருமேனி அழகில் ஈடுபடுவது போலவே அவளும் ஈடுபட்டுச் சுவைத்தாள்; அவன் தோள்மேல் எழுந்த பேராசையால் சீதையைப் பகைத்தாள்; அவளைத் தன் அண்ணனுக்குக் காட்டிக் கொடுக்கத் துணிந்தாள். சூர்ப்பனகையின் ஒட்பம் சூர்ப்பனகை புலம்பி அழுது ஓடி வரும்போது இராவணன் காமமகளிர் சுற்ற இருந்தாலும் அறிவு மயங்கி இருக்கவில்லை. தங்கையின் அறுகோலத்தைக் கண்டதும் சினந்தான். இடியெனக் கழறினான், யார் செயல் இது என்று கேட்டான். நடந்தவற்றை யெல்லாம் தனக்கேற்ற முறையில் சூர்ப்பனகை விரித்துரைத்தாள். தன்னை மானவழிவு செய்தார்கள் மானுடர்கள் எனவும் தொடர்ந்து எழுந்த சேனைகளையும் படைத் தலைவர்களையும் கணப்பொழுதில் கொன்றவர்கள் மானுடர்கள் எனவும் இராவணனுக்குச் சீற்றம் பெருகு முறையில் குறிப்பிட்டாள் என்ன வெல்லாமோ கூறினாள். அவ்விருவருடன் சீதை யொருத்தி வந்துள்ளாள் என்பதை மாத்திரம் வெளியிடவில்லை. வெளியிடுதற்கு நல்வாய்ப்பைப் பார்த்தாள். முழவொலியும் வீணையொலியும் குழலொலியும் சங்கொலியும் முழங்குகின்ற இலங்கையில் அழுகுரல் பிறந்தது. அவ்வழுகுரல் யாருடையது? மூன்றுலகையும் வென்ற இராவணன் தங்கையது. அழச் செய்தார் யார்? மானுடர். இவற்றைக் கேட்கக் கேட்க இராவணனுக்குக் கோப மற மானங்கள் கொதித்தெழுந்தன. இக் கொதிப்புக் களத்தைக் காமக்களமாக இப்போது மாற்றவேண்டும். ஆயிடிையெழுந்த சீற்றத் தழுந்திய துன்பம் ஆழித் தீயிடை யுகுக்கும் நெய்யிற் சீற்றத்திற் கூற்றஞ் செய்ய நீயிடை யிழைத்த குற்றம் என்னைகொல் நின்னை யின்னே வாயிடை யிதழும் மூக்கும் வலிந்தவர் கொய்ய என்றான். என்வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுதொணாத தன்மையன் இராமனோடும் தாமரை தவிரப் போந்தாள்