பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - 79 மின்வயின் மருங்குல் கொண்டாள் வேய்வயின் மென்றோள் கொண்டாள் பொன்வயின் மேனி கொண்டாள் பொருட்டினாற் புகுந்த தென்றாள். ஆரவள் என்ன லோடும் அரக்கியும் ஐய ஆழ்ந்து தேரவள் திரண்ட கொங்கை செம்பொன்செய் குலிகச் செப்பு பாரவள் பாதந் தீண்டப் பாக்கியம் படைத்த தம்மா பேரவள் சீதை யென்று வடிவெலாம் பேசலுற்றாள். முதற்பாட்டு இராவணன் நேர்மைத் தன்மையைக் காட்டுகின்றது. சினம் தலைக் கொண்டபோதும், நீ செய்த குற்றம் என்ன? கேவலம் மானுடர்களுக்கு இவ்வளவு துணிச்சல் வரவேண்டும் என்றால் நீ ஏதோ பெருங்குற்றம் செய்திருக்க வேண்டும் என்று வினவுகின்றான். அண்ணனிடமிருந்து இக் கேள்வியைத் தங்கை எதிர்பார்க்கவில்லை. நீ செய்த குற்றம் என்ன? என்ற வினாவிற்கு நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே என்று அவள் கூறியிருக்கலாம். அங்ங்னம் கூறினால் அவன் உடன்படமாட்டான் போலும் என்று அவளுக்குப் பட்டுவிட்டது. அவன் சொல்வழி இசைய வேண்டும் என்று அவளுக்குப் புலனாயிற்று. எதிர்த்து மொழிந்தால் தன்னைச் சினப்பான், இசைந்து மொழிந்தால் தன்வழி நடப்பான் என்று சடுதியிற் கண்டு கொண்டாள் ஒட்பமுடைய, சூர்ப்பனகையாள். அவள் மதிநுட்பத்துக்குச் சிறந்த இடம் இது. இராமாயணத்திலேயே அரிய காப்பியக்களமும் இது. கோபத்தைக் காமதாகமாக மாற்றிய இடம் இதுவே. 'நீ இடை இழைத்த குற்றம் என்னை' என்ற வினாவிற்கு நேர்விடையாக என்வயின் உற்ற குற்றம் என்று தொடங்கினாள் அரக்கி. அத் தொடக்கமே தங்கையின் சொல்லை நம்பும்படி செய்துவிட்டது அவனை. நான் செய்த குற்றம் ஒரழகியால் நிகழ்ந்தது என்று கடக்கென்று மறுமொழிந்தாள். இராவணன் சினம் மாறியது, மனம் மாறியது, குரல்மாறியது. ஆரவள் என்று மீண்டும் ஒரு வினா எழுப்பினான். இவ்வினாவில் ஆசைக் குறிப்புத் தோன்றியது. அவ்வினாவிற்கு விடையிறுக்கு முகமாக முதற்கண் சீதை பெயரைக் கூறினாள்; உறுப்பழகை யெல்லாம் ஒன்றுவிடாது உவமித்துக் காட்டினாள்; உலகில் அரிய இவ்வழகி உனக்கே உரியவள் என்று