பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கம்பன் ஆய்வில் புதிய தடங்கள் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் நிறுவனர் - மெய்யப்பன் தமிழாய்வகம் தமிழ்மொழி காப்பியங்கள் நிறைந்த மொழி. நெஞ்சை அள்ளும் சிலம்பு தொடங்கிப் பாண்டியன் பரிசு வரை பல்வகைக் காப்பியங்கள் மொழிக்குச் செழுமை சேர்த்து வருகின்றன. காப்பியங்களின் கட்டமைப்பை அடியார்க்கு நல்லார் மிக நுட்பமாக விளக்கியுள்ளார். நச்சினார்க்கினியரும் காப்பியக் கவின்களைச் செவ்விய முறையில் ஆராய்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் மேலைப் புலங்களில் வளர்ந்து வரும் திறனாய்வு அடிப்படையில் தமிழ்க் காப்பியங்கள் ஆராயப் பெற்றன. இலக்கியக் கலைகள், இலக்கியத் திறனாய்வுகள் என்று நூல்கள் பல்கின. பெருகின. வெளிநாட்டு அளவுகோல்களைக் கொண்டு இந்திய இலக்கியங்களின் பெருமை பேசப்பெற்றது. தமிழ்க் காப்பியங்களின் தனிச்சிறப்பினை, அமைப்பினை, அழகினை மூதறிஞர் செம்மல், வ.சுப. மாணிக்கனார் தூய தமிழ்த் திறனாய்வு நெறியில் ஆராய்ந்துள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கம்பராமாயணம் போற்றப் பெற்றாலும், ஆராயப் பெற்றாலும் கம்பர் என்னும் இந்நூல் கம்பர் ஆய்வில் முடிமணியாகத் திகழ்கிறது. மூத்த தமிழுக்குப் புது ஆய்வு நெறியை அளிக்கிறது. பெருங்காப்பியத்தின் பரப்பளவு, களங்கள், கட்டமைப்பு, தொடர்ச்சி, ஒருமை இந்நூலில் மிகச் சிறப்பாக இதற்குமுன் கூறப்படாத வகையில் நிறுவப் பெற்றுள்ளன. காப்பியப் புலவனின் அறிவாற்றல், படைப்புத் திறன், காவிய நயங்கள் நுண்ணாய்வு நெறியில் ஆராயப் பெற்றுள்ளன. பெருங்காப்பியப் புகழ் பரவி வரும், காப்பியக் கல்வி சிறந்து வரும் இந்நாளில் இவ்வகை நூல்கள் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன. பெருங்காப்பிய ஆய்வுக்கு வழிகாட்டி மட்டுமன்று. வளர்தமிழ்