பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 81 தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர் மாயையும்மவர் பெற்றநல் வரமுண்மை யானும் ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத் தாலும். விதியது வலியி னானும் மேலுள விளைவினாலும் பதியுறு கேடு வந்து குறுகிய பயத்தி னானும் கதியுறு பொறியின் வெய்ய காமநோய் கல்வி நோக்கா, மதியிலி மறையச் செய்த தீமைபோல் வளர்ந்த தன்றே. இராமன்பால் அன்பிற் சிறந்த கைகேசி கேவலம் சிறிய கூனி சொற்கேட்டுக் கொடியவன் ஆனாள் என்பது முழுதும் ஒப்பத்தக்கதோ? வெள்ளியங்கிரியினை அள்ளி எடுத்த இராவணன் கேவலம் தங்கையின் சொல்லாற்றலில் மயங்கிக் கயவன் ஆனான் என்பது முற்றும் உடன்படத் தக்கதோ? இவ்வாறு ஆராய்கின்றார் கம்பர். இமையவர்தம் சூழ்ச்சி பலித்தற்காகக் கைகேசி தீயவள் ஆகவும் இராவணன் தீய காமுகனாகவும் ஆதல் வேண்டும். வேந்தர் பிரான் தயரதனார் பணியினால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும் கடை முறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்றம்மா எனவரும் மண்டோதரி புலம்பலில் அடிப்படைக் காரணத்தை அறிகின்றோம். - காப்பியக்களம் என்ற தலைப்பில் தேவர் வரவையும் கைகேசியின் கொடுமையையும் இராமன் சூழ்ச்சியையும் இராவணன் வேட்கையையும் எடுத்துக் காட்டினேன். காப்பிய இயக்கத்துக்கு இவ்விடங்கள் வேண்டியன என்று விளம்பினேன். ஒவ்வொரு படலமும் உணர்ச்சிக் களம் எனவும், புலவன் எந்த உணர்ச்சி காப்பிய மேல் வளர்ச்சிக்குத் துணை செய்யுமோ அந்த உணர்ச்சியை வெல்லச் செய்கின்றான் எனவும் சுட்டினேன். கையடைப் படலத்துச் சினவுணர்ச்சியும், தாடகைவதைப் படலத்துப் பெண்கொலை யுணர்ச்சியும், மந்தரை சூழ்ச்சிப் படலத்துக் கொடுமையுணர்ச்சியும், கைகேசி சூழ்வினைப் படலத்து மகவுண்ர்ச்சியும், குகப் படலத்து அடிமை யுணர்ச்சியும், மாரீசன் வதைப் படலத்து மயக்க உணர்ச்சியும், மரர்மரப் படலத்துத் தந்திர உணர்ச்சியும் வாலிவதைப் படலத்து அரசியலுணர்ச்சியும், கிட்கிந்தைப் படலத்து அமைதி உணர்ச்சியும், ஊர்தேடு படலத்து ஆய்வுணர்ச்சியும், நிந்தனைப் படலத்துப் பெண்துணிபு. உணர்ச்சியும், உருக்காட்டுப் படலத்து விடுதலை உணர்ச்சியும், வீடணன் அடைக்கலப் படலத்து நம்பிக்கை உணர்ச்சியும், முதற் போர்ப் படலத்து வெட்க உணர்ச்சியம், கும்பகருணன் வதைப் མྦྷར་:་༧༧ நன்றி யுணர்ச்சியும், இந்திர சித்து வதைப் படலத்து