பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

- A A. 82 - - கம்பர் அறிவுலக உணர்ச்சிகளும், இராவணன் வதைப் படலத்து வீரவுணர்ச்சியும், மீட்சிப் படலத்துச் சோதனை உணர்ச்சியும் சுற்ற உணர்ச்சியும் விஞ்சிப் பெருகிக் காப்பியத்தை நடத்திச் செல்லக் காணலாம். வேறுபல உணர்ச்சிகளும் ஒவ்வொரு படலத்து விரவி யிருந்தாலும் காப்பிய வளர்ச்சிக்குத் துணை செய்யும் உணர்ச்சியைத்தான் தொடருணர்ச்சியாகக் கொள்ள வேண்டும். இன்மைக் களங்கள் காப்பியக் களம் என்ற தலைப்பை வளர்ச்சி நோக்கத்தில் இதுவரை கண்டோம். காப்பிய நெடுமைக்காக உணர்ச்சிகள் போராடுவதைக் கண்டோம். பிறிதொரு நோக்கத்திலும் இத் தலைப்பில் நான் சில சொல்லவேண்டும். காப்பியத்தை நீட்டிக்க விரும்பும் புலவன் சிறு களங்களை அமைத்தல் கூடாது. அமைத்தானாயின், அமைத்து நீட்டிக்க விரும்புவானாயின், அது செல்லுபடியாகாது. ஆதலின் களங்களைப் படைக்கும் காப்பியன் சில தடைக்களங்களைப் படைக்காது தவிர்க்கின்றான். விட்டு விடுகின்றான். சில களங்களை முற்றும் தவிர்க்கின்றான். வேறு சில களங்களை இடைக்கொட்கச் செய்யாது கடைக் கொட்கச் செய்கின்றான். களங்களை உணர்ச்சி மோதும் பெருங்களம் ஆக்குதல், களங்களை அமைக்காதே ஒழித்தல், களங்களைக் காலம் பார்த்து அமைத்தல் என்பவையெல்லாம் காப்பிய நெறிகள் ஆகும். இந்நெறிகளின் கரையைக் கண்டவர் கம்பர். தயரதனைப் பாராமை கைகேயி கேட்டபடி நாடுதுறந்து காடேகும் இராமன் இலக்குவனோடும் சீதையோடும் தயரதனை வந்து சந்தித்தான் எனவும், இராமன் முன்னிலையில் தயரதனுக்கும் கைகேயிக்கும் உரையாட்டம் நடந்தது எனவும், மன்னவன் பார்க்கவே மரவுரி தரித்து மூவரும் புறப்பட்டனர் எனவும் கூறியுள்ளார் வான்மீகியார். தயரதனுக்கு உயிராவான் இராமனே என்பது கம்பர் துணிபு. கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதியென உயிர் இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான் எனவும் மன்னவன் இன்னுயிர் வழிக் கொண்டால் எனவும் மைந்தனலாது உயிர் வேறிலாத மன்னவன்' எனவும், 'என் கண்ணெதிர் நின்றுங் கழிவானேல் உய்யேன் எனவும், போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவிபோனான் எனவும் தயரத வுடலுக்கு இராமவுயிர் காட்டும் கம்பர், வனம் புகுமுன் தயரதன் இராமன் சந்திப்பை அறவே நீக்கி விட்டார் தம் காப்பியத்து. அத்தகைய ஒருகளம் அமைத்தாரேல் கொண்டு நடத்தமுடியுமா? தந்தையிட்ம் கடைசியாக விடை பெற்று