பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 97 மானமும் சோகமும் இராவணன் நெஞ்சை அகலாது தாக்கின. இவை தாக்கத்தாக்கக் காமச்சிந்தனை குறைந்தது. குறையுந் தோறும் போரெண்ணம் நிறைந்தது. கும்பகருணன் இறப்புக்குப் பின் இராவணன் நெஞ்சத்தில் வீரமே பெருகிற்று. அழிவுகள் புலனாயின. அவ்வழிக்குத் தான் காரணம் என்பதும் புலனாயிற்று. நோக்கறவும் எம்பியர்கள் மாளவுமிந் நொய்திலங்கை போக்கறவும் மாதுலனார் - பொன்றவுமென் பின்பிறந்தாள் மூக்கறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலைக்கிடந்த ஏக்கறவால் இன்னம் இரேனோ உனையிழந்தும். யாரோ ஒருத்திமேற் கொண்ட தன்னாசையால் என் வீரநோக்கம் அற்றது, கரன் கும்பகன்னன் என்ற தம்பிமார் மாண்டனர். மாரீச மாமன் உயிர்விட்டான். தங்கை மூக்கற்றும் பழிபொறுத்தேன். இலங்கைத் தலைநகர் எரியுண்டது'. இவ்வாறு கேடுகளை அடுக்கிப் புலம்புகின்றான் இராவண வேந்தன். இனி அவன் சீதையைவிடாது வைத்திருப்பது இன்பத்துக்கு அன்று: விட்டால் எல்லோரும் இகழ்வர் என்ற மானத்துக்கு ஆகும். சீதையைக் காமப் பொருளாக நினையாமல், இனிப் போர் நடப்பதற்கு வேண்டும் பகைப் பொருளாக நினைத்தான். யாக்கையை விடுவதல்லால் சீதையை விடுவதில்லை என்று இப்போது அவன் சொல்லுதற்குக் காரணம், புகழாசையன்றிப் பெண்ணாசையன்று. . வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் நின்றுளென் அன்றோ மற்றவ் வீராமன்பேர் நிற்குமாயின் பொன்றுத லொருகாலத்தும் தவிருமோ பொதுமைத் தன்றோ இன்றுளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதியுண்டோ. எப்படியும் இராமனோடு போரிடவேண்டும் என்பது இராவண்ன் முடிபு. இம் முடிபு பிழையன்று. சீதை காரணமாகப் பலர் பலியானதற்குப்பின், சீதையை விட்டு வாழ்தல் என்பதுஅவனுக்குப் பழியேயாகும். இழிவேயாகும். முக்கோடி வானாள் பெற்ற அவனும் தனக்கு அழிவுண்டு என்று உணர்ந்துவிட்டான்: அவ்வழிவும் இராமனால் வரும் என்பதையும் உணர்ந்துவிட்டான். gs.7。