பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 čBIDLuft கண்ணிறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற உண்ணிறை மானந்தன்னை உமிழ்ந்தெரி உயிர்ப்பதானான். வானகும் மண்ணும் எல்லாம் நகும்.நெடு வயிரத் தோளான் நானகு பகைஞர் எல்லாம் நகுவர்என்றதற்கு நாணான் வேனகு நெடுங்கட் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த சானகி நகுவள் என்றே நாணத்தாற் சாம்பு கின்றான். இவ்விரண்டும் சீதை நல்லாளுக்கு இராவணன் சிறைக் கம்பிகளை ஒரளவு அகற்ற வந்த பாடல்கள். சீதைப் பெண் தங்கிய நெஞ்சை நாணம் கைப்பற்றிக் கொண்டது என்றால், காமத்தால் உறங்காது கவலைப்பட்டது போய்'மானத்தால் துயில் கொள்ளாது இருந்தான் என்றால், வானகத்தார் மண்ணகத்தார் எல்லோரும் சிரிப்பரே என்பதைப் பொருட்படுத்தாமல் தான் காமுற்ற சானகி கேலி செய்வாளே என்று நானுகின்றான் என்றால், எவ்வளவு மாற்றம்? எவ்வளவு நல்லோட்டம்? தீய இராவணன் தூயவன் ஆகின்றான், ஆக்கப் படுகின்றான் என்பது போதரவில்லையா? இராகவன் அழகோடு ஒப்பிடும்போது மன்மதன் அழகு நம் அழகெல்லாம் கேவலம் நாயழகாகும் என்று கருதுகின்றான் என்றால், சீதைக் காதல் கடை போகாது என்று தெரிந்து கொண்டான் என்பது குறிப்பு. வரவர அவன் உள்ளத்துச் சீதை மறைகின்றாள். இராமன் பகைவனாகத் தோன்றுகின்றான், காமம் படிப்படியாக மறைகின்றது, வீரம் படிப்படியாக வளர்கின்றது. நாசம் வந்துற்றபோது, நல்லதோர் பகையைப் பெற்றேன் என்பது இராவணவாசகம். எதிரியை மதித்தல் வீர இலக்கணம். இராமாயணத்து இராவணன் பக்கத்தாருக்கு எத்தனை வதைப் படலங்கள் ஒரு வதைப்படலாமாவது இராமனைச் சார்ந்தாருக்கு உண்டா? கிங்கரர் வதை, சம்பு மாலி வதை, பஞ்சசேனாதிபதிகள் வதை, அட்சகுமரன் வதை, மரக்கண்ணன் வதை, இந்திரசித்து வதை எனப் பல படலங்கள் உள. இவற்றோடு பொழில் இறுத்த படலம், இலங்கை எரியூட்டு படலம், மகுடபங்கப் படலம், முதற் போர்ப் படலம் எனச் சில படலங்களும் உள. இவ்வளவு அழிவுப் படலங்கள் ஏன்? இப்படலங்களின் பயன் என்ன? இவையெல்லாம் இராவணன் உள்ளத்திலிருந்து சீதையைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கும் படலங்கள் என்று கொள்ளவேண்டும். இவ்வளவு அழிவுகள் பலமுனையில் நிகழ்ந்தன. நிகழுந்தோறும் நாணமும்