பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - 95 - அநுமன் பொழில் அழித்து இலங்கையை எரித்த நிகழ்ச்சி இராவணனது காமநெஞ்சில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திற்று. வெகுளியுணர்வும் மானவுணர்வும் நெஞ்சில் ஒரளவு இடம் பெற்றன. இதற்காகவே மந்திர அவையை மறைவாகக் கூட்டினான். "தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என்', 'இட்டது இவ்வரியணை இருந்தது என்னுடல் என்றெல்லாம் கொதித்தான். சிற்றிடைச் சீதை யென்னும் நாமமும் சிந்தைதானும் உற்று இரண்டு ஒன்றாய் நின்ற நெஞ்சில் மானமும் ஐந்து பத்து விழுக்காடு புகுவதாயிற்று. என்றானும் இணைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் நின்றார்கள் தேவர் கண்டார் என்பதோர் நாணம் நீள அன்றாய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆகப் பொன்றாது பொன்றி னான்தன் புகழென இழிந்து போனான். சுக்கிரீவனால் மகுடம் பறிபோனபோது இராவணன் பட்ட மனநிலை இது. ஒருநாளும் இத்தன்மையை அடைந்ததில்லை இலங்கையரசன் என்று எடுத்துக் காட்டுகின்றார் புலவர். நாணம் பெருகிற்றாம், காமம் தோன்ற வில்லையாம் என்றால் அவன் உள்ளத்திற் சீதை ஒரளவு விலகினாள் என்பது கருத்து. கைலை மலையை ஊசி வேரொடும் எடுத்த தன் மதுகையையே மதித்துக் கொண்டிருந்த அவனுக்கு முதற்போர் பெரும் உள்ளப்போர் ஆயிற்று. வாழ்க்கைக் கலக்கத்தை உண்ட்ாக்கிற்று. இராவணன் நாணத்தால் இராமனுக்கு முன்னே தலை கவிழ்ந்தான், பெருவிரலால் நிலங்கிளைத்தான். இராமன் பெருந்தன்ம்ையால் போய் வருக என்று சொல்லவே திரும்பினான். திசையானை வென்ற மார்பினையும் மலையெடுத்த தோளினையும் யாழிசைத்த நாவினையும் முடி பத்தினையும் சிவன் அருளிய வாளினையும், ஏன் வீரத்தையுமே களத்தில் இழந்து வெறுங்கையோடும் புதுப்பழியோடும் நடந்து போய் இல்ங்கை நகரம் சேர்ந்தான். திசை நோக்காது, வழி நோக்காது, படை நோக்காது, மாந்தரை நோக்காது, மகளிரை நோக்காது, எதனையும் எவரையும் நோக்காது குனிந்தபடியே அரண்மனை புக்கான். பண்ணிறை பவளச் செவ்வாய்ப் பைந்தொடிச் சீதை யென்னும் பெண்ணிறை கொண்ட நெஞ்சில் நாணிறை கொண்ட பின்னர்