பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - கம்பர் காட்டுகின்றார் என்றால், இவ்வேழாயிரம் பாடல்களில் சீதையை மெல்லமெல்ல விடுதலை செய்யும் ஒரு வேலையைப் புலவர் விடாது செய்திருக்கின்றார் என்பது பெறப்படவில்லையா? எடுத்தது கண்டனர் இறந்து கேட்டனர் என்பதுபோல வைத்தான் சீதையை மறுகணம் விடுத்தான் என்று பாடி முடித்துவிட முடியுமா? இடைப்பட்ட ஏழாயிரம் பாடல்களையும் ஒரு நோக்குக் கொண்டு எண்ணப் பின்னலாக ஆயும்போது கம்பர் பெருமகனின் அளவிலாச் சிந்தனைத் திறம், ஞாபகத்திறம், அயராத்திறம், நிறைதிறம் எல்லாம் புலப்படுகின்றன. சீதைப் பெயரோடு தன் நெஞ்சை ஒன்றாக்கிய இராவணன் காமத்தை எங்ங்ணம் மாற்றுவது? 'நீலத்தார் அரக்கன் மேனி நெய்யின்றி எரிந்ததன்றே என்ற எல்லைக்குச் சென்ற இராவணன்தன் காமக் கனலை எங்ங்னம் அவிப்பது? ஒர் வலிய உணர்ச்சியை மற்றோர் வலிய உணர்ச்சியாக மாற்ற வேண்டுமாயின் இடையில் பிறழும் உணர்ச்சிகள் வரவேண்டும். இங்ங்னம் உணர்ச்சி மாற்றத்துக்கு ஆயத்தம் செய்யவேண்டும். இவ்வேழாயிரம் பாடல்களிலும் இதனைச் செய்து முடித்தார் கம்பர். கல்வியிற் பெரியவர் கம்பர் என்பார்கள். சீதை இராவணன்தன் மனச் சிறையிலிருந்து முற்றும் விடுதலை. பெறுவதற்காக ஏழாயிரம் பாடல்களில் பேராயத்தம் செய்திருப்பதை எண்ணும்போது காப்பியத்திற் பெரியவர் கம்பர் என்று சொல்லுவோமாக. இதனை விரித்து விளக்குவதற்கு இச் சொற்பொழிவு கால இடன் தராது ஆதலின் குறிப்பிற் காட்டிச் செல்வேன். - தூய்மையாக்கம் காமம் புகுந்த காலந்தொட்டே இராவணன் சில சமயங்களில் தன்னைத் தானே தாழ்த்திப் பேசலானான். 'மாரவேள் கொதிக்கும் அம்பால் பொன்றலின் இராமன் அம்பாற் பொன்றலே புகழுண்டன்றோ என்பது மாயமான் ஆகும் மாரீசன்முன் இராவணன் பேசும் பேச்சு. உறவினரும் பிறரும் அவன் முன்னே அவனைத் தாழ்த்தியும் கடிந்தும் உரைக்கலாயினர். அக்கன் இறந்தபோது கொன்றனை நீயே யன்றோ அரக்கர்தங் குழுவை' என்பது மேகநாதன் சினப்பு. சிட்டர் செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய்' என்பது கும்பகருணன் பழிப்பு. பேதையாய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ சீதையாய் இன்னம் வருவ சிலவேயோ என்பது மகன் அதிகாயன் இறந்தபோது தானமாலை புலம்பல். இராவணன் பிறன்மனை நயந்த செயலை அவன் பக்கத்தார் யாரும் ஆதரிக்கவில்லை. சிலர் வெளிப்படையாகக் கடிந்தனர். பலர் வாளாவிருந்தனர். இதுவே அவன் எண்ணத்திலும் பேச்சிலும் நாளாக் ஆக மாற்றங்களை ஏற்படுத்தியது. -