பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 93 பொன்மய மான நங்கை மனம்புகப் புன்மை பூண்ட தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்ததோர் தகைமை யாலோ மன்மதன் வாளி தூவி . . நலிவதோர் வலத்தன் ஆனான் வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்த தன்றே தங்கைவாய்க் கேட்ட மங்கையைக் கண்டு பற்றுவதற்கு முன்பே, இதயச் சிறையில் எண்ணப் பிடிப்பால் சீதையை வைத்தான். வைத்தவன் யாவன் எனில் எயில் உடை இலங்கை நாதன் என்ற சுட்டினார் கம்பர். இவ்வலியவன் உள்ளத்து உள்ள சீதையை அப்புறப் படுத்தல் எளியது ஒன்றன்று என்பது புலவர் குறிப்பு. இராவணன் மறந்த சமயம் பார்த்து மன்மதன் மலரம்பு விசி வருத்தினான் என்பதனால் இத்தகைய காமத்துக்கு இடங்கொடாத ஓர் உரத்தினன் இராவணன் என்பது பெறப்படும். “வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்த தன்றே என்பதனால் வீரத்தை மாற்றிக் காமம் புகுந்தது என்பதும் அவன் நெஞ்சத்துப் புகுந்த காமத்தை அகற்றினாலல்லது மீண்டும் வீரன் ஆகான் என்பதும் பெறப்படும். 4. வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் - எள்ளிருக்கும் இடனின்றி உயிரிருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் . உள்ளிருக்கும் எனக்கருதியுடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி. - காப்பியம் என்பது தனிப்பாட்டன்று, முழுப் பார்வைக்கு 'உரியது என்று என்முதற் சொற்பொழிவிலிருந்து வலியுறுத்தி வருகின்றேனே. அதற்கு நிகரற்ற எடுத்துக் காட்டு இச்செய்யுள். 'இலங்கைநாதன் இதயமாஞ் சிறையில் வைத்தான் என்று ஆரணிய காண்டத்து மாரீசன் வதைப் படலத்துச் சீதையை இராவணன் தன் அகச்சிறையில் அடக்கியதாகக் கூறிய கம்பர் 6800 பாடல்கள் தாண்டி உயுத்த காண்ட இராவணன் வதைப் படலத்தில் "மனச்சிறையிற் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி என்று அவள் விடுதலை பெற்றதை எடுத்துக்