பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - - - கம்பர் வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டார்க் கெல்லாம் ஆசற நல்கி ஒல்காப் - போர்த்தொழிற் கமைவ தானான். இராவணன் முற்றும் காமவுணர்வு அற்றான் எனவும் தெய்வ வுணர்ச்சியும் போருணர்ச்சியும் திரும்பப் புகப் பெற்றான் எனவும் இப்பாடல் விளம்புகின்றது. வெள்ளி மலையை விடையோடும் உமையோடும் சிவனோடும் அள்ளியெடுத்தவன் என்று செருக்காகப் பாராட்டப் பெற்ற இராவணன் இப்போது இம்மை மறுமைக்கு ஏற்ற பூசை செய்கின்றான். சீதை அழகைச் சூர்ப்பனகை சொல்லக் கேட்ட நாள் முதல் தன்னைக் காமத்தொழிற்கு ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த இராவணன், சீதையை விடுவது உண்டோ இருபது தோளுண்டாக என்று காமவுரை மொழிந்த அவன் இப்போது போர்த் தொழிற்கு - சீதையைத் துயர் உறுத்தும் போர்த்தொழிற்குப் புறப்பட்டான். இம்மாற்றம் முன் சொல்லியாங்கு மண்டோதரி களம் அமைந்ததால் விளைந்த பயன் என்று அறிய வேண்டும். மனச்சிறை மண்டோதரி வரவு இராவணன் தூய்மையானதற்கும் சீதையைப் பகைவன் மனைவி என்று உணர்தற்கும் முடிவுக் காரணமாயினும் இவ்விறுதிக் களமே அவனை நொடிப் பொழுதில் முற்றும் தூயன் ஆக்கிற்று என எண்ணி விடாதீர்கள். அவனைப் பிறன்மனை நயக்கும் காமுகன் ஆக்குவது எளிதன்று என்பதை முன்னர்க் காட்டினேன். அரிதிற் காமுகன் ஆன அவன் உள்ளத்திலிருந்து படிந்த காமத்தடிப்பை ஒரு நிகழ்ச்சியில் ஒரு களத்தில் ஒரு செய்யுளில் ஒரு படலத்தில் அகற்றி விடுவதும் எளிதன்று. விரைவில் வந்தவை. விரைவிற் போகும். அரிதில் வந்தவை அரிதிற்றான் போகும். கூனி சூழ்ச்சியால் அன்பு துறந்த கைகேசி போல, சூர்ப்பனகையின் பெருஞ் சூழ்ச்சியாலும் சொல்லாற்றலாலும் தங்கை என்ற நம்பிக்கையாலும் வீரம் துறந்த காமியாகிவிட்டான் இராவணன். மயிலுடைச் சாயலாளை . வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாஞ் சிறையில் வைத்தான் அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல வெயிலுடை நாளில் உற்ற - வெண்ணெய்போல் வெதும்பிற் றன்றே.