பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 9 | காட்சியாலும் தன் செவி கேட்க வரும் அழிவைச் சொல்லிப் புலம்பலாலும் இராவணனுக்கு ஏற்பட்டது. சீதையைக் கொல்லலாம் என்று நினைப்பளவில் இருக்க வில்லை. இராவணன் கொல்லவே முயன்று புறப்பட்டுவிட்டான். அங்ங்ணம் ஒடுகின்றவனை நோக்கி அருகிருந்த மகோதரன் அவனடி வணங்கி, இது புகழ்க்கேடு என்று சொல்லி ஒருவாறு தடுத்தான். நீ சீதையைக் கொன்றால் உலகம் என்ன சொல்லும்? இராமனோடு போரிட்டால் வெல்ல முடியாது என்று கருதி இங்ங்ணம் ஒரு சூழ்ச்சி செய்தான் என உன் வீரத்தைப் பழிக்காதா என்றான் மகோதரன். அதன்பின் சீதையை வெட்ட எடுத்த வாளை நிலத்தில் எறிந்தான் என்று அறிகின்றோம். மண்டோதரி சந்திப்புக்குப் பின் அவள் நினைவே இராவணன் மனத்துப் புகுந்துவிட்டது. சீதையைப் பகைவன் மனைவி என்று முறைப்படி கருதினான். மன்ற லங்குழற் சனகிதன் மலர்க்கையால் வயிறு கொன்ற லந்தலைக் கொடுநெடுந் துயரிடைக் குளித்தல் அன்றி தென்றி.டின் மயன்மகள் அத்தொழில் உறுதல் இன்றி ரண்டினொன்றாக்குவென் தலைப்படின் என்றான். இறுதிப்போருக்குத் தேரரேறிப் போகும் இராவணன் கூறும் வீரவுரை இது. 'இராமனைக் கொல்வேன். அதனால் அவன் மனையாள் சானகி தன் கையால் வயிற்றைப் பிசைந்து துன்பமுற வேண்டும். யார் மனைவி தாலியறுக்கப் போகின்றாள் என்பதை இப்போரில் முடிவாகப் பார்த்துவிடப் போகின்றேன் என்று முழுங்குகின்றான் இராவணன். எவ்வளவு தெளிவான தூய்மையான வீரமொழி இது. இராவணன்தன் இப்போருரையில் சிறிதாவது காமமாசு உண்டா? அவன் உள்ளத்து அவன் மனைவியே குடிகொண்டிருந்தனள் என்பதும் அவள் துயருறுதலை அவன் விரும்பவில்லை என்பதும் 'மியன் மகள் அத்தொழில் உறுதல் என்ற நடையாலும் தன் மனையாளை இரண்டாவதாகக் கூறியதாலும் அறியலாம். ஈசனை இமையா முக்கண் இறைவனை இருமைக்கேற்ற பூசனை முறையிற் செய்து திருமறை புகன்ற தானம்