பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கம்பர் பஞ்செரி யுற்ற தென்ன அரக்கர்தம் பரவை யெல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்ட தில்லை அஞ்சினேன் அஞ்சி னேனிச் சீதையென்றமிழ்தாற் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளைஇத்தகையன் அன்றோ. இராவணன் முடிவை மண்டோதரி உணர்ந்து விட்டாள். அவன் கேட்குமாறு முன்னிலைப் புறமொழியாக அவ்வுணர்வைப் புலப்படுத்தினாள். 'சீதை என்று அமிழ்தாற் செய்த நஞ்சு என்று தன் கணவன் நயந்த பெண் பெயரைக் குறிப்பிட்டாள். அவள் கணவன் உயிர்க்கு அவள் அமிழ்து; பிறன்மனை நயந்த என் கணவன் உயிர்க்கு நஞ்சு என்று கருத்துரைத்தாள். கற்பு நஞ்சினைக் குடித்த என் கணவன் முக்கோடி வாணாளன் ஆயினும் இன்னும் சின்னாளில் முடிதல் திண்ணம் என்று துணிவும் தெளிவும் துக்கமும் படமொழிந்தாள். - என்றழைத் திரங்கி யேங்க இத்துயர் நமர்கட் கெல்லாம் பொன்றழைத் தனைய அல்குற் சீதையாற் புகுந்த தென்ன வன்றழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத் தாளை வாளால் கொன்றிழைத் திடுவென் என்னா ஓடினான் அரக்கர் கோமான். மனைவிமொழி செவியுற்ற இராவணன் விரைவிற் பெற்ற மாற்றம் பெரிது. தன் படையாளரும் தம்பியும் மகனும் பிறரும் பட்ட அழிவெல்லாம் அவன் உள்ளத்திரையில் ஒரு கணம் தோன்றிற்று. எல்லா உயிர்க்கேடும் இச்சீதையால் வந்தது என்று எண்ணினான். இக் கெடுதற்காரியை இரு துண்டாக்குவேன் என்று அரண்மனையிலிருந்து அசோகவனம் நோக்கி ஓடத் தொடங்கினான் என்றால் சீதையைத் தன் காம இரையாகக் கருதியதை விட்டொழித்துத் தன் வாளிரையாகக் கருதினான் என்பது தெளிவு. சீதையைக் காமப் பொருளாகக் கருதாமல் பகைப் பொருளாகக் கருதினான் என்பது தெளிவு. இம்மாற்றம் மேகநாதன் இறப்பால் நிகழ்ந்ததன்று; மகன் இறந்துபோது, மனைவி தன் கண்காண அழுத