பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 89 வழியடைக்கும் கல்லாகும் என்று கருதி மந்திரி சபையில் மண்டோதரிக்குப் புலவன் இடங்கொடுக்கவில்லை. மண்டோதரிக்கு அமைத்த களங்கள் சிலவே. அவளுக்கு அட்சன் என்ற ஒரு மகன் உண்டு. அவனை அநுமன் கொன்றுவிட்டான். அச்செய்தி கேட்டு அன்னையாகிய அவள் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு இராவணன் முன் புலம்பி வீழ்ந்ததாக ஒரு பாடல் உள்ளது. சுந்தர காண்டத்தில். இதனை ஒரு களமாகக் கம்பர் அமைக்க நினைக்கவில்லை. மயன் மகள் வயிறலைத்து அலறி மாழ்கினாள் என்று தாயின் ஒப்பாரியை மிகச் சுருக்கிவிட்டார். ஏன் அங்ங்னம் செய்தார்? இந்திரனை வென்ற மகனாகிய மேகநாதன் இறக்கும்போது, மண்டோதரிக்கு ஒரு பெருங்களம் படைக்க வேண்டியுள்ளது என்பதனைக் கம்பர் அறிவாரன்றோ? பின்னர் வரும் ஓர் அரிய காப்பியப் பயனை உட்கொண்டு இந்த மகன் இறப்பைச் சிறப்பாகப் பாடவில்லை. இம்முறையைப் பாத்திர மறைப்பு என்று கொள்ளவேண்டும். பின் வரும் வாழ்க்கைப் பெருஞ்செலவு கருதி எவ்வளவு சிக்கனமாக முன்பே சிலர் நடந்து கொள்கின்றனர். அது போலும் காப்பியச் சிக்கனம் பெருங்காப்பியப் புலவனுக்கு வேண்டும். . - உயுத்த காண்டத்து இராவணன் சோகப்படலம் நல்ல உணர்ச்சிகளுக்கு வழி செய்த படலம். பிறன்மனை நயந்த இராவணனும் அவன் மனைவி கற்புட்ைய நங்கை மண்டோதரியும். உயிரோடு சந்திக்கும் ஒர் இராமாயணப் படலம் இது. மேகநாதன் இறந்த சோகத்து அச்சந்திப்பு நிகழ்கின்றது. கும்பகருணன் முதலான வீரரெல்லாரும் வதைப்பட்ட பின்னும், மேகநாதனது தனி வீரத்தை நம்பியிருந்தான் இராவணன். அந்நம்பிக்கை முனை ஒடிந்து விட்டது. எனக்கு நீ செய்யத்தக்க கடனெல்லாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வதானேன் என்று தனக்கும் சாவு உண்டு என்பதுகூடப் பேசத் தொடங்கி விட்டான். பன்னிப் புலம்பினான். இரங்கினான், ஏங்கினான், மகனுடலைச் சுமந்து கொண்டு அரண்மனை சென்றான். மலையின்மேல் மயில் வீழ்ந்த தென்ன மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள் மண்டோதரி, உயிரற்றவள் போலானாள்; மகனது தலையிலா உடம்பைக் காண இன்னும் வாழ்கின்றேனே என்று கதறினாள். அவனது இளமை வீரத்தை எல்லாம் நினைந்தாள். சிவன் முதலோரை வென்ற என் புதல்வன் கேவலம் மக்களில் ஒருவன் கொல்ல மாண்டானே என்று ஒலமிட்டாள். மனைவியின் அரற்றலை இராவணன் நேரடியாகக் கேட்கும் களம் இது. பலவாறு புலம்பல் செய்த மண்டோதரி, இராமயணத்தில் பெருந் திருப்பஞ் செய்த பாடல் இது.