பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 '. . - . கம்பர் கற்புடை மனைவியர் பழிக்கத் தக்கவர் அல்லர். அந்நிலையிலும் தற்காத்துத் தற்கொண்டானைப் பேணும் அவர்தம் மனைமாட்சி பாடுபெறத் தக்கது. பேகன் கண்ணகியும் கோவலன் கண்ணகியும் சாதுவன் ஆதிரையும் இல்மாட்சியிற் சிறந்தவர்கள். இராவணனது சிறுமை மணிவாசகருக்குத் தெரியாதோ? தெரிந்துதான், 'தென்னிலங்கை அழகமர் வண்டோதரி என்று அவன் மனைவியைப் பாராட்டித் திருவாசகம் பாடினார். என்றழைத்தனள் ஏங்கி யெழுந்தவன் பொன்றழைத்த பொருவரு மார்பினைத் தன்றழைக்கைகளாற்றழு வித்தனி நின்றழைத்துயிர்த் தாளுயிர் நீங்கினாள் இராவணன் இறந்தபின் கைம்மையாய் வாழ விரும்பாது, பெருமூச்சு விட்டு நொடிப்பொழுதில் உடனுயிர் துறந்தாள் மண்டோதரி. இவ்வகை இறப்பு மிகவும் போற்றப்படும். காதலர் இறப்பின் எரிமூட்டி உடன்கட்டை ஏறாது நினைப்பளவில் உயிர்விடுவர் என்று மணிமேகலை யாசிரியர் ஒரு கற்பியர் கூறினாரே, அதற்கு எடுத்துக் காட்டு மண்டோதரி. உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் என்று சுருங்கச் சொல்லி அவள் கற்பை விளங்க வைத்தார் கம்பர். தயரதன் இறந்த பின் அவன் மனைவியர் யாரும் உடனுயிர் துறக்கவில்லை என்பதையும் ஏனைத் தேவியர்களே அங்ங்ணம் செய்தனர் என்பதையும் ஒப்பு நோக்கிக் கொள்ளுங்கள். இன்ன சிறப்புடைய இராவணன் தேவிக்கு இராமாயணத்து எவ்வளவோ களங்கள் அமைக்கலாம். அநுமன் இலங்கையை எரியூட்டிய பின், இராவணன் மந்திரிசபையைக் கூட்டினான். பொதுவாக அரசவையில் அரசனும் அரசியும் வீற்றிருப்பது அரசமுறையல்லவா? பேரமர் உண்கண் இவளினும் பிரிக' என்று அரியணையில் தன் பாங்கர் இருந்த தேவியைச் சுட்டி வஞ்சினம் மொழிந்தான் பூதப் பாண்டியன். பாண்டியன் நெடுஞ்செழியனோடு அவன் குலமுதற்றேவியும் மந்திர அவைக்கண் கூட இருந்தாள் என்று கொலைகளக் காதையிலும் வழக்குரை காதையிலும் அறிகின்றோம். எண்கு தன் பிணவோடு இருந்தது போல எலும்பணையில் காட்டுக் குருமகன் தன் அரசியொடு இருந்தனன் என்று ஆதிரை பிச்சையிட்ட காதையில் அறிகின்றோம். இவ்வழ்க்குப்படி இலங்கைக்கு நேர்ந்த அழிவுபற்றிக் கூடிய அவையில் மண்டோதரியும் வீற்றிருந்தாள் என்று ஒரு களம் அமைத்தால், என்னாகும்? சிந்தித்துப் பாருங்கள். கற்புடைய நங்கை அந்த அவையைக் கலைத்துவிட மாட்டாளா? காப்பிய நடப்புக்கு