பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் 87 - அமைப்பு என்ன? பாத்திரங்களுக்குக் களம் அமைப்பதிலும் அமையாது விடுப்பதிலும் ஒரு பகுத்தறிவு புலவனுக்கு வேண்டும். காப்பியம் என்பது பேரிலக்கிய மாளிகை. அதன் சிறப்பு உரிய இடத்து உரிய பொருளை உரிய அளவில் அமைக்கும் முறையில் உள்ளது. தாறுமாறாகக் கிடப்பதில் சில தனிச் சுவை தோன்றினும் அதனை நெல்லிச் சாக்குப் போல ஒரு கவிதைச் சாக்காகவே கருதவேண்டும். தொடர்பழகும் சிந்தனையுரமும் இரா. காலமறிதல் இடமறிதல் வலியறிதல் என்பன காப்பிய இலக்கணங்கள் ஆகும். ஒர் எடுத்துக்காட்டு. வினாத்தாட்களை முன்னரே வெளிப் படுத்தினால் குற்றம்; உரிய காலம் வரும் வரை போற்றிக் காத்துத் தேர்வறையில் வெளியிட்டால் ஒழுக்கம். முன்னரே தெரிந்து கொள்ளவேண்டும் என்று பலர் ஆசைப்படுவார்கள். உரிய காலத்துத் தெரியச் செய்வதே மதிப்பும் பயனும் ஆகும். காப்பியப் புல்வனுக்கு அடக்கம் வேண்டும். ஒரு கருத்து முன்னரே உதித்தாலும், அஃது இறுதிப் படலத்துக்கு ஏற்றஞ் செய்யுமெனின், அதுகாறும் அறிவிற் பொதிந்து கொள்ளவேண்டும். ஒரு பாத்திர வரவு எவ்வளவு சிறப்பினதாயினும், ஒரு முறை வந்தாற் போதும் எனின் அவ்வளவில் நிறுத்தும் புலமையுரன் வேண்டும். சிந்தனை ஊற்றெடுக்கும் புலவனும் காப்பிய அமைப்பு என்ற வரம்பிற்குள் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும். காற்பந்து உதைப்பவன் எவ்வளவு தொலை செல்ல உதைக்கின்றான் என்பது பார்வையன்று. அத்தொலை களவெல்லைக்கு உட்பட்டிருக்க வேண்டாமா? ஒவ்வொரு முறையும் பந்து ஓங்கி உதைபட்டு வெளிச் சென்றால், அவன் விளையாட்டுக்கு உலக வெல்லை கூறுவதன்றி ஒத்துவரும் எல்லை கூறமுடியாது. காட்டுத்தனமாகக் கால்வைக்கின்றான் என்றோ, தோல்வி மனப்பான்மையினால் காலத்தை ஒட்டுகின்றான் என்றோ கழப்படுவான். காப்பியம் என்பது புலவன் படைப்பாயினும், து அப்படைப்பு அமைப்பு வகையில் படைத்தவனையும் கட்டுப்படுத்துகின்றது. மண்டோதரி களங்கள் - இன்றைய என் சொற்பொழிவின் இறுதிக்களமாக இராமாயணத்தின் இறுதிக்களத்தை விளக்கி முடிப்பேன். இராவணன் மனைவி மண்டோதரி எல்லாப் பெண்மையும் நிறைந்தவள். அன்னளாகிய சானகி இவள் என்று அநுமனே கருதினான் என்றால் மண்டோதரியின் அழகுக்கும் கற்புக்கும் வேறு சான்று வேண்டுமோ? கணவன் ஒழுக்கந்தவறி என்பதற்காகக்