பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கம்பர் என்பதை விரித்து ஒரு படலம் செய்கின்றார் கம்பர். மேகத்தையும் மயிலையும் மானையும் கொடியையும் தன் உயிரையும் இந்திர கோபத்தையும் விளித்து இராமன் புலம்பும் காம உளறல்கள் பல. ஆனால் இக் கார்காலம் இலக்குவனையாதும் செய்யவில்லை. அவனும் மனைவியைப் பிரிந்திருப்பவன் தானே? பிரிவு யாரையும் வாட்டுமன்றோ? அவ் வாட்டம் இலக்குவனுக்கும் வந்தது எனவும் அதனை அவன் பொருட்படுத்தாது கருமமே கண்ணாக இருந்தான் எனவும் பாடினாற் கூட, ஒரு கால் சுவையாக இருந்தாலும், உண்மைச் சார்பாக இருந்தாலும், காப்பிய நடையில் முரண் தோன்றும். தலைமைப்பாத்திரத்துக்கு அமைக்கும் பல களங்களைத் தலைமையிலிகளுக்கு அமைக்கக் கூடாது. உண்ணிறைந்துயிர்க்கும் வெம்மை யுயிர்சுட உடலை யுள்ளம் புண்ணுறவாளி தூர்த்தல் பழுதினிப் போதி மரா எண்ணுறு கல்வி யுள்ளத் திளையவன் இன்னே யுன்னைக் கண்ணுறு மாயிற் பின்னை யாரவன் சீற்றங் காப்பார். கார்காலத்து வருந்தும் இராமன் தன்மேல் மலர்க்கணைகள் வீசும் மன்மதனைப் பார்த்துக் கூறும் செய்யுள் இது. இலக்குவனது காமவென்றியைப் பாராட்டும் பாடல் இது. மன்மதா, என்னைக் காப்பதற் கென்றே என் தம்பி உடன் வந்துள்ளான். என் உயிரும் உடலும் உள்ளமும் புண்ணாகும் படி நீ அம்பு தொடுப்பதை விட்டுவிடு. என்னை வருத்தும் உன்னை என் இளையவன் கண்டு விடுவானாயின், சினம் பொங்கும். அச் சினப்பொங்கலை யார் தடுப்பார்? நீ அவனைக் காமப்படுத்த இயலாது. ஏன்? வந்த காரியத்தைத் தவிரப் பிறிதொன்றுபுகாத உள்ளம் உடையவன். நின் மலரம்பு அவனைப் பாயாது. என்று கார்காலத்தில் தன் மென்மையையும் தன்னையும் காக்கும் இலக்குவன் வன்மையையும் வெளிப்படுத்துகின்றான் இராமன். பதினா லாண்டும் இலக்குவனது காம உணர்வைக் கம்பர் பாட நினைத்ததில்லை. அங்ங்னம் ஒரு பாட்டு இருந்தால், இராமாயணத்து இடைச்செருகல் மிகுதியில்லை என்ற கொள்கையுடைய நானும், அப்பாடலை எடுத்தெறியத் தயங்கேன். அவன் அவ்வுணர்வுச்சுவடு இல்லாதவன் என்பதற்கு உடனிருக்கும் இராமன் சொல்லே சான்று. இதனால் நாம் அறியப்படும் காப்பிய