பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - - 35 அமைக்க வேண்டும். தன் திறங்காட்ட வேண்டி, முற்றும் இடையூறான உணர்ச்சிகளுக்குக் களம் சமைத்தலாகாது. செய்தக அல்ல செயக் கெடும் என்பது காப்பியத்துக்கும் பொருத்தமான வள்ளுவம். ஆதலின் கோவலன் புகாரை விட்டு மதுரை சென்றபின், கொலை வாய்ப்படுவதற்குமுன், இனி நீட்டிப்புக்கு இடையூறு இல்லை என்று மணிமேகலையைச் சிலப்பதிகார அரங்கத்து வரச்செய்தார் இளங்கோ. - - இலக்குவனைக் காமப்படுத்த்ாமை 4. w பல்வேறு களங்களைப் படைப்பதாலும் வேண்டிய . விரிப்பதாலும் காப்பியம் ஆலமாம்போல் அகல விலக் விளங்குகின்ற்து. அங்கனம் விரிக்கும் புலவன் சில களங் படைப்பத்துப வளர்ப்பதிலும் விழிப்புடையவன் மற்றென்று விரித்தல் என்னும் குதத் து. சுவை கருதியோ தன் புலமைப் புல் நூற் பெருக்கம் கருதியோ வேண்டாத ஒன்று ன்ை ஆகாது. சுருங்கச் சொல்லின் அமைப்பு முரண் என்ற குறிதம் காப்பியத்துக்கு உதவாது. - இலக்குவனுக்கு ஊர்மிளை என்ற ஒரு மனைவியுண்டு. அண்ணனுடன் வனஞ்செல்ல நினைத்த இலக்குவன் தன் மனையாளிடம் சொல்லிக் கொண்டானா? சொல்லிக் கொண்டிருந்தால், சீதை சொல்லியனபோல, அவளும் உடன் வருவேன் என்று பிடிவாதம் செய்திருந்தால் கதைப் போக்கு என்ன போக்காக இருக்குமோ அன்னை சுமித்திரையிடம் மட்டும் சொல்லிக் கொண்டான். அவளும் 'மகனே இவன்பின் செல், தம்பியென்னும் படியன்று, அடியாரின் ஏவல் செய்தி என்று சிறிதும் தடை செய்யாது ஒரு குறிக்கோள் காட்டி விடுக்கின்றாள். எல்லா உணர்ச்சிகளும் இராமனுக்கு அடியவன் என்ற ஒரு மூலவுணர்வில் அடங்கிவிட்டன. இராமன் சீதையிடம் சென்று, கருவி மாமழைக் கற்றடம் கண்டு நான் வருவென் ஈண்டு வருந்தலை நீ" என்று தெரிவித்தது போல் இலக்குவனும் ஊர்மிளையிடம் சென்று தெரிவித்தான் என்பது உலகியலுக்குப் பொருந்துமாயினும், காப்பியத்துக்கு மற்றொன்று விரித்தல் என்ற இழுக்காகிவிடும். காப்பியத் தலைவனான இராமனுக்குச் சொல்வன வெல்லாம் கூடச் சென்ற இலக்குவனுக்கும் சொல்லலாமா? கிட்கிந்தை கார்காலப் படலத்தில் இராமனது காதல் வேட்கை ... " புனையப்படுகின்றது. சீதையின் பிரிவை நினைத்துத் தனித்துப் புலம்பும் அவனைக் கார்க்ாலம் எங்ங்ணம் எல்லாம் வாட்டியது 3.3