பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கம்பர். மறுமுறை சென்றிருக்கக் கூடும். அவனுக்குக் கண்ணகியால் மகப்பேறு இல்லையன்றோ? மணிமேகலைக் குறிப்பு முன் கடிதத்திலும் இல்லை. பின் கடிதத்திலும் இல்லை. கானல்வரிப் பிரிவுக்கு முன்னே மணிமேகலை பிறந்துவிட்டாள். எனினும் பதினைந்தாவது அடைக்கலக் காதைக்குமுன்வரை மணிமேகலை வரவை இனங்கோ தவிர்த்தார். புகார்க் காண்டத்து அவளைச் சிறிதும் யார் வாயிலாகவும் நினைவூட்டவில்லை. நினைவூட்ட விரும்பின், இடங்களா இல்லை? கடலாடுவதற்குக் கோவலனும் மாதவியும் சென்றனர். வசந்தமாலையும் உடன் சென்றனள். ஏவலாளரும் சென்றிருந்தனர். ஒரே மகள் சிறுமி மணிமேகலை மட்டும் செல்லவில்லை என்பது பொருந்துமா? சென்றிருந்ததாகச் சொன்னால் நடப்பது வேறு. - - உவவுற்ற திங்கள் முகத்தாளைக் க்கை ஞெகிழ்ந்தனனாய்ப் பொழுதீங்குக் கழிந்த தாகலின் எழுதுமென்றுடனெழாது ஏவலாளருடன் சூழ்தரக் கோவலன்தான் போன பின்னர்த் தாதவிழ் மலர்ச்சோலை ஒதையாயத் தொலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தினுள்புக்குக் காதலனுட னன்றியே மாதவிதன் மனைபுக்காள். கோவலன் ஒரு புறமும் மாதவி வேறுபுறமும் செல்லுமாறு மணிமேகலைக் குழந்தை உடனிருந்தால் விட்டிருக்குமா? ஊழ்வினையையம் உப்பக்கம் காணவல்லதன்றோ குழந்தையின் சூழ்வினை? அகப்பாடல்களில், தீராத பிணக்கைக் குழந்தை மருந்து தீர்க்கக் காண்கின்றோம். தந்தையர்க்கு அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை' என்பது ஒளவையின் வாக்கு. மணிமேகலைப் பிறப்பைக் கோவலன் கொடையளித்துக் கொண்டாடியவன். மகளை அவன் மறந்தானல்லன் என்பது இடைச்சி மாதவி விட்டில் அவன் கண்ட கனவால் அறிகின்றோம். மாதவியோடு பல்லாண்டு வாழ்ந்தபோதும், கடலாடச் சென்றபோதும், கடிதங்கள் எழுதியபோதும், மணிமேகலையைக் கிஞ்சிற்றும் சொல்லாது காப்பிய இளங்கோ ஏன் விடுத்தார்? நன்றாகப் பேசக்கூடிய தலைப்புக்களையே மேற்கொள்ள வேண்டும் என்பது போலக் கொண்டு செலுத்தக் கூடிய களங்களையே புலவன்