பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பரம்பரைகள்

31



தானே என்று கேலியாகக் கூறிவிட்டாள் ஒரு நாள். அந்தச் சமயம் சிங்காரம் பார்த்த பார்வை அன்னத்தின் கண்களிலே நீரைப் பெருக்கிவிட்டது. தேவாமீது பிறந்த கோபம், அன்னத்தின் வீட்டை விட்டுக்கிளம்பி, தனபாலச் செட்டியாரின் அழகான மாளிகைக்குள் நுழையுமா? "ஜார்ஜ்"மீதுதான் பாய்ந்தது, அதுவும், சிங்காரம் வீட்டில் இல்லாத சமயங்களில்.

அன்று மழை! தெருவெல்லாம் சேறாகிவிட்டது சிங்காரம் வசித்து வந்த வீதியிலே 'தார்ரோடு' இருக்குமா, அவன் என்ன தனபாலனா! அந்தச்சேற்றிலே உருண்டு புரண்டு "ஜார்ஜ்" தன்னுடைய வெள்ளை நிறத்தைக் கெடுத்துக்கொண்டு, வீதி சுற்றி வீட்டு இலைக்குக் குலைத்துக்கிடக்கும் 'மட்டரக' நாயாக நின்றான். அன்னம் தேவாவை எண்ணி, ஒரு வகையான திருப்தி பெற்றாள். அந்தத் தேவாவும், வாழ்க்கையிலே சேறும் அழுக்கும் நிறைந்த இடத்திலே போய்ச் சேர்ந்தால், இந்த ஜார்ஜு போலத்தான் உருமாறிப்போவாள். இப்போது உள்ள மினுக்கும் தளுக்கும் இராது என்று எண்ணினாள். கொஞ்சம் சந்தோஷமும் அடைந்தாள். அர்த்தமற்ற ஆனந்தந்தான், ஆனால் அன்னம் அதற்குமேல் என்ன எதிர்பார்க்க முடியும்! ஏழையின் கண்ணீருக்குத்தான் ஆழ்ந்தபொருள் இருக்கும். ஜார்ஜின் நிலையைக்கண்டான் சிங்காரம். அதை இந்தக் கதிக்கு ஆளாகவிட்டு, இளித்துக்கொண்டிருக்கும், அன்னத்தையும் கண்டான், கடுங்கோபம் கொண்டான்: சீறினான்; கண்டபடி ஏசினான், அன்னத்தை அடிக்கவும் கை ஓங்கினான்: தெருக்கோடியிலே, ஒரு கூட்டம் வரக்கண்டு, அடங்கினான்.

தனபாலச் செட்டியாரின் தூரபந்து, குழந்தைவேலு முதலியார். செட்டியாருக்கு முதலியார் பந்துவா? என்று சந்தேகம் பிறக்கும், விஷயம் இது. 'செட்டியார்' என்று