பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கற்பனைச்சித்திரம்



சிலபகுதிகளில் வாழும் முதலியார்களுக்குப் பட்டம்உண்டு. தனபாலர் அந்த வகை. குழந்தைவேலரின் ஒரே குமாரர் அருமைநாதன்; சமூகசேவாசங்கத்தலைவர், அந்தச் சங்கத்தை ஆரம்பித்தவர், நடத்துபவர், தலைவர் யாவும் அருமைநாதனே தான்! சர்க்கார் மானியமும், கன தனவான்களின் நன்கொடையும், அந்தச் சங்கத்துக்கு ஏராளம். அருமைநாதன்; ஏழை எளியவரின் நல்வாழ்க்கைக்காகத் தமது உடல்பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணிக்கத் தணிந்துவிட்டவர், என்று அவரைப்புகழாத பத்திரிகையே கிடையாது. சமூக சேவா சங்கத்தலைவரின் அபாரகான பணியினால், ஏழையின் எந்தப்பிணியாவது போயிற்றா என்று மட்டும் யாரும் கணக்குப் பார்த்ததில்லை; பார்க்கவுங் கூடாதல்லவா? அருமைநாதர் என்ன அன்னக்காவடியா, சீமான் மகன் அவர்; 'அடிக்கடி' ஏழைகளின் விடுதிகளைப் பார்வையிடுவார். பிய்ந்து போன கூரைகள், உடைந்த மண்பாண்டங்கள், சரியும் சுவர்கள், குப்பைகூளக் குவியல்கள், ஈமொய்க்கும் இடங்கள், புழு நெளியும் சாக்கடைக்கால்கள் ஆகியவற்றைப் பார்வையிடுவார். பிறகு, இந்த அசுத்தங்களினாலே தான், பிளேக், இன்புளூயென்சா, காலரா முதலான நோய்கள் பிறக்கின்றன. அவை ஏழைகளைச் சாகடித்துவிட்டுப் பிறகு, நகரெங்கும் பரவி, மக்களை அழிக்கின்றன, என்பதுபற்றிய விளக்கத்தை உரைப்பார். இந்த அசுத்தம் நிரம்பிய இடத்திலேயே இருந்து தீரவேண்டிய நிலை ஏன் ஏழைக்கு வந்தது, என்பது பற்றி அவர் பேசினதில்லை. பேசும்படி கேட்டவர்களுமில்லை. அருமைநாதரின் கண்கள் இந்த ஏழை விடுதியிலே உள்ள அசுத்தத்தைக் காண்பதோடு ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. அழுக்கு ஆடையை அணிந்து கொண்டிருந்த அழகிய அபலைகளையும், கூர்ந்து கவனித்து வந்தார்; கண்ணடியிலே விழும் கனியைச் சுவைப்பார், மற்றதுகளைப்பற்றி, சிச்சீ! இந்தப்புழம் புளிக்கும் என்பார். அவர் "சமூக சேவா சங்கவேலைசெய்ய" தேவா சகிதம், வந்தார் அன்று; அழகான மங்கையும் ஆடம்பர ஆடவனும், ஏழைகளின் விடுதிப்பக்கம் வந்தால், கும்பல் சேரத்தானே