பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கற்பனைச்சித்திரம்


னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை? அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்குதான் என்னை? என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத்துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்களா என்பீரேல், இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். இக்காலத்து மட்டுமல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினையும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும், குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களையும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பலவற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூதெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண்களை, நான் நம்பாதிருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே நான் காண்கிறேன், அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் சில பலர், அடாதது கூறுகின்றனர், நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக்கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணராய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர் அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவியுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் கூவுவேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத்தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள், ஏட்டினைப் படித்தீர்கள், அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! எப்படி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி-