பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தம்

47

இரத்தம்

இரத்தம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் இயல்பு உடையது. உடம்பில் காயப்பட்டால் உடம்பிலுள்ள இரத்தம் முழுவதும் வெளியே வடிந்து விடாதிருக்கும் பொருட்டு, அதுஉடனே கட்டியாக உறைந்துவிடுகிறது.

சிவப்பணுக்களும், பிளேட்லெட்டு என்னும் இரத்தத் தகடுகளும் பெரும்பாலான வெண்மையணுக்களும் எலும்பிலுள்ள மச்சையில் உண்டாகின்றன.

மனித வுடலில் இரத்தவோட்டம்

பாலூட்டிகளிலும் பறவைகளிலும் உள்ள அமைப்பு. பறவைகளில் பெருந்தமனி வலப் பக்கமாக வளையும். பாலூட்டிகளில் இடப்பக்கமாக வளையும். 1. உடலின் மேற்பாகம்.
2. மேற்பெருஞ் சிரை.
3. நுரையீரல் இரத்த நாளங்கள்: இங்கு அசுத்த இரத்தம் சுத்த இரத்தமாக மாறுகிறது.
4. நுரையீரல் சிரை.
5. நுரையீரல் தமனி.
6. கீழ்ப்பெருஞ் சிரை.
7. பெருந்தமனி
8. ஈரல், பெருந்தமனியிலிருந்து ஒரு கிளைமூலம் சுத்தரத்தமும் இரைப்பை குடல் ஆகிய உணவுப் பாதையிலிருந்து (போர்ட்டல் சிரை வழியாகச்) சிரைரத்தமும் ஈரலுக்கு வருகின்றன.
9. இரைப்பை குடல் ஆகிய உணவுப் பாதை.
10. சிறு நீரகங்கள்.
11. உடலின் கீழ்ப்பாகம்.
அம்புக் குறிகள் இரத்தம் ஓடும்

திசையைக் காட்டுகின்றன.

எல்லா மக்களுடைய இரத்தமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. நான்குவிதமான இரத்தமிருப்பதாக நோபெல் பரிசு பெற்ற கார்ல் லாண்டஷ்டைனர் கண்டு பிடித்துள்ளார் (பார்க்க: இரத்தக் குழுக்கள்).

இரத்தமே உடம்பைப் போஷிப்பதாயிருப்பதால் இரத்தம் அதற்குத் தக்க நிலைமையில் இருக்கும்படி செய்வதற்கான உணவுகளை உண்ணவேண்டியது இன்றியமையாததாகும். ஹீமொகுளோபின் உண்டாவதற்காக இரும்புச் சத்துள்ள உணவு அவசியம். புரதங்கள் ஒஹீமொகுளோபின் பீளாஸ்மா இரண்டையும் உண்டாக்க உதவும். மதுசாரம் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துமாதலால் பாம்புக்கடி முதலியவற்றால் விஷம் ஏதாவது உடம்பில் இருக்குமானால் அதைப் பருகக்கூடாது. புகை குடித்தலும் இரத்த அமுக்கத்தை அதிகமாக்கும்.

பெரும் பாலான விலங்குகளின் உடம்பிலும் இரத்தம் காணப்படுகிறது. முதுகெலும்புடைய மிருகங்களின் இரத்தத்தில் ஹீமொகுளோபின் இருக்கும். மண் புழுவிலும் மற்றுஞ் சில புழுக்களிலும்கூட இது உண்டு. இரத்தக் கறையை வைத்துது விலங்கின் இரத்தமா அல்லது மனிதனுடைய இரத்தமா என்று மருத்துவர்கள் சோதித்து அறிந்துகொள்ள முடியும்.


இரத்த வோட்டம்: ஓர் உயிரானது வளர்வதற்கும் நிலைபெற்று வாழ்வதற்கும் இன்றியமையாத சில பௌதிகச் செயல்களும் ரசாயன மாறுபாடுகளும், அது உயிரோடிருக்கும் காலமெல்லாம், இடைவிடாது அதன் உடலிலே நடைபெற்று வருகின்றன. இச் செயல்களும் மாறுபாடுகளும் நடக்கின்றன என்பது அவ்வுயிர் உணவு உண்பது, ஆக்சிஜனை உட்கொள்வது, கழிவுப் பொருள்களை வெளிவிடுவது ஆகிய காரியங்களால் வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த உயிர் நிகழ்ச்சிகள் ஓருயிரின் உடலிலிருக்கும் உயிருள்ள ஒவ்வோர் அணுவிலும் நடக்கின்றன. ஆதலால் உயிருள்ள அணு ஒவ்வொன்றிற்கும் உணவும் ஆக்சிஜனும் வந்து சேரவேண்டும். அந்த அணு ஒவ்வொன்றிலிருந்தும் கழிவுப்பொருள் அகற்றப்பட வேண்டும். உணவையும் ஆக்சிஜனையும் தந்து உதவவும், கழிவுப் பொருளை அகற்றிச் செல்லவும் ஒரு போக்குவரத்துச் சாதனம் உயிர்களுக்கு வேண்டியிருக்கிறது.

அமீபா (த.க.) முதலிய ஓரணுவுயிர்கள் தங்களுக்கு வேண்டிய உணவையும் ஆக்சிஜனையும் தாம் வாழ்வதும் தம்மைச் சூழ்ந்துள்ளதுமான நீரிலிருந்து நேரே தமது மேற்பரப்பின் வழியாக உட்கொள்ளுகின்றன. கழிவுப் பொருளையும் நேரே அந்நீரிலேயே விட்டுவிடுகின்றன. உயிரணுவின் மேற்பரப்புக்கும் நீருக்கும் இடையே பரவல், சவ்வூடு பரவல் என்னும் முறைகளால் இச்செயல்கள் நடக்கின்றன.

பலவணுக்களால் ஆகிய உயிர்களிலே உடலின் மேற்பரப்பில் உள்ள அணுக்கள் மட்டுமே நீரில் படக் கூடும். உள்ளேயிருக்கும் அணுக்களுக்கு உணவும் ஆக்சிஜனும் செல்வது - எளிதன்று. அவற்றிலிருந்து கழிவுப்பொருள் அகல்வதும் எளிதன்று. புரையுடலி என்னும் கடற்காளான் தொகுதியிலே உடலின் மேலெல்லாம் சிறு சிறு துவாரங்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக நீரானது நுண்ணிய குழாய்கள் அல்லது சிறு அறைகளுக்குள்ளே செல்கின்றது. இக்குழாய்களும் அறைகளும் உடலின் நடுவே அமைந்துள்ள பெரிய அறைக்குள் திறக்கின்றன. அந்த அறைக்கு ஒரு பெரிய வாயில் உண்டு. குழாய்களின் உட்சுவரும் அறைகளின் உட்சுவரும் உயிரணுக்களாலாகியவை. அந்த அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சவுக்குப் போன்ற இழை உண்டு. அது கசை எனப்படும். கசைகளை ஒழுங்காக அலைப்பதால் நீரோட்டம் சிறு துவாரங்கள் வழியாகப் புகுந்து, குழாய்களிலும் அறைகளிலும் சென்று, வெளியே பெரிய வாயில் வழியாகப் போகின்றது. இந்த நீரிலிருக்கும் உணவையும் ஆக்சிஜனையும் அணுக்கள் பெறுகின்றன கழிவுப் பொருள்கள் அதன் வழியாக வெளியே போகின்றன.

பவளம், கடற்சாமந்தி முதலிய குழியுடலிகளில் உடலானது ஒரு குழிபோல அல்லது கிண்ணம்போல இருக்கிறது. அதற்கு ஒரே வாய் இருக்கிறது. கிண்ணத்தின் வாயின் வழியாக நீர் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கும். கிண்ணத்தின் சுவரில் அணுக்கள் இரண்டு அடுக்காக இருக்கின்றன. உள்ளே இருக்கும் அடுக்கைச் சேர்ந்த அணுக்கள் அந்த நீரிலிருந்து வேண்டியவற்றைக் கொண்டு, வேண்டாத பொருளை அதற்குள் செல்லவிடும்.

தட்டைப் புழுவின் உடலும் பல அணுக்களாலானது. இதில் உணவுப் பாதையும் கழிவுறுப்புக்களும் பல கிளைகளாகப் பிரிந்து உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கின்றன. ஆக்சிஜன் உடலின்