பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தம்

48

இரத்தம்

மேற்பரப்பு வழியாகப் பரவல் முறையில் உட்கொள்ளப்படுகின்றது.

இவற்றிலெல்லாம் நன்றாக அமைந்த இரத்தம் என்னும் திசுவோ, அது ஓடுவதற்கு ஏற்ற தனிக் குழாய்களோ ஏற்படவில்லை. அதனால் இவற்றின் உடல் சற்று ஏறக்குறைய மெல்லியதாகவே, பரவலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. இரத்தக் குழாய் மண்டலம் ஏற்பட்ட பிறகே உடல் பல வேறு உறுப்புக்கள் உடையதாகவும், பருமனாக வளரக் கூடியதாகவும். சிக்கலான அமைப்பு உள்ளதாகவும் ஆகின்றது. இந்த வுண்மை உயிர்களின் பரிணாம முன்னேற்றத்திற்கு இரத்தமும் இரத்தக் குழாய் மண்டலமும் செய்யும் உதவியைக் காட்டுகின்றது.

மண்புழு போன்ற வளையப் புழுக்களிலே இரத்தம்

இரத்தத்தின் பண்டமாற்று

B. தந்துகியில் இரத்தம் ஓடுதல் W. கழிவுப் பொருள் O. ஆக்சிஜன் F. உணவுப் பொருள்

L. திணநீர் C. திசுக்களிலுள்ள அணு.

ஓடுவதற்கு நீண்ட குழாய்களும் குறுக்குக் குழாய்களும் அமைந்திருக்கின்றன. இக்குழாய்களுள் சிலவற்றின் சுவரானது தசைத்திசு உள்ளதாகி, சுருங்கியும் விரிந்தும் இதயத்தைப்போல இரத்தத்தைச் சுற்றிவரச் செய்கின்றது. இரத்தம் முழுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையனவான குழாய்களால். அமைந்த ஒரு மூடிய (Closed) குழாய் மண்டலத்தினுள்ளே ஓடுகின்றது.

மண்புழுவின் இரத்தம் மனித இரத்தத்தைப் போலச் செந்நிறமானது. அதிலும் ஹீமொகுளோபின் என்னும் பொருளே அந்த நிறத்தைத் தருவது. ஆனால் மனிதனது இரத்தத்தில் இருப்பதுபோலச் சிவப்பு இரத்த அணுக்கள் அதில் இல்லை. அதனால் ஹீமொகுளோபினானது இரத்தத்திலுள்ள நீர்ப்பொருளாகிய பிளாஸ்மாவிலேயே கரைந்திருக்கிறது.

மண் புழுவின் இரத்தக் குழாய்கள்
புழுவின் முன்பாகத்திலுள்ள பதினான்கு வளையங்கள் மட்டும் காட்டப்பட்டிருக்கின்றன.

a. இதயங்கள்
b. பக்கக் குழாய்கள்

C. கீழ்க் குழாய்
d. மேற் குழாய்.

இறால், நண்டு, பூச்சி முதலியவற்றிலும் இரத்தக் குழாய்கள் உண்டு. அவற்றின் உடலின் முதுகுபுறத்தில் நீளத்தில் அமைந்துள்ள பெரிய குழாய் இதயம்போலத்துடிப்புள்ளது. சில குழாய்கள் வழியாக இரத்தம் பல பாகங்களுக்குச் செல்கின்றது. ஆனால் அங்குள்ள பல இடைவெளிகளிலே இரத்தம் பாய்ந்து சென்று, சில சிறு துவாரங்கள் வழியாக இதயத்துக்குள் வந்து சேர்கிறது. இந்த உயிர்களிலே

தந்துகிகளில் இரத்த வோட்டம்

நீர்த் தவளையின் பின் கால் விரல்களுக்கு இடையிலுள்ள சவ்வை மைக்ராஸ்கோப்பில் பார்க்கும்போது காணும் தோற்றம். தவளையின் சிவப்பணுக்கள் நீள்வட்ட வடிவமானவை. கருமையாகக் காண்பவை தோலிலுள்ள நிறவனுக்கள். தந்துகிகளில் சிவப்பணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் போக முடிகிறது.

தந்துகிகள் அவ்வளவு மெல்லியன.

இரத்தக் குழாய்மண்டலம் முழுவதும் மூடிய மண்டலமாக இராமல் திறந்த (Open) மண்டவமாக இருக்கிறது. உடலில் இரத்தம் ஓடும் இடைவெளிகள் ஹீமொசீல் அல்லது இரத்த உடலறை எனப்படும். நத்தை முதலியவற்றிலும் குழாய்கள் திறந்த அமைப்புள்ளவையே. இந்தப் பிராணிகளில் இரத்தம் ஏறக்குறைய நிறமில்லாமல் இருக்கும். அதில் ஹீமொகுளோபினுக்குப் பதிலாக ஹீமொசயனின்என்னும் பொருள் இருக்கிறது.

தந்துகிகள்


சிறிய தமனியிலிருந்து கிளைகிளையாகப் பிரிந்து, பிறகு சேர்ந்து சிறியசிரையாக ஆவது.

வெண்மையும் கருமையுமாகக் காட்டியிருப்பது தமனி ரத்தம் ஆக்சிஜனைத் திசுக்களுக்குக் கொடுத்து அவற்றிலிருந்து கார்பன்டை ஆக்சைடை ஏற்றுச் சிரைரத்தமாக மாறுவதைக் காட்டும்.

முதுகுதண்டு விலங்குகளிலே இரத்த வோட்டம் இரண்டு மண்டலங்களில் நடக்கிறது. ஒன்று இரத்தக்குழாய் மண்டலம்; மற்றொன்று நிணநீர் மண்டலம், இரத்தக்குழாய் மண்டலம் தமனி, தந்துகி, சிரை என்னும் குழாய் வகைகளாலானது. இதற்குள் பிளாஸ்மா, சிவப்பணுக்