பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் பாரதியும்

15


இது திருவிளையாடற் புராணத்தில் காணப்படுவது.

"சிவபெருமானே தோன்றி, தமிழைச் சொன்னதாயிருந்தால் அதைப் பற்றி நமக்கென்ன கவலை? ஆபத்து வந்தால் அந்த சிவபெருமானே வந்து கவனித்துக் கொள்வார்" என்று தமிழர்கள் நம்பினார்கள். தமிழ் அமானுஷ்யமான காரியங்களையெல்லாம் செய்ய வல்லது. சர்வசக்தியுடையது. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்ய வல்லது பரதத்துவம் அளிக்க வல்லது என்றெல்லாம் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது ஓ! அப்படியா? தமிழ் இவ்வள வெல்லாம் செய்யுமா? நிரம்ப ஆனந்தமாயிற்றே! ஆனால் ஒன்றையும் செய்ததாகக் காணோம்!

கண்ணுதற் பெருங் கடவுளுங் கழக
மோடமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்
பசுந் தமிழேனை
மண்ணிடைச் சில விலக்கண
வரம்பிலா மொழி போ
லெண்ணிடைப் படக் கிடந்தது

வெண்ணவும் படுமோ.

கடவுளே கழகத்தில் வந்திருந்து சீர்திருத்தி விட்டுப்போனதாகப் பாடப் பட்டிருக்கிறது.


கவிஞர் பேசுகிறார்