பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கலை என்றால் என்ன?


போது எதிர்க்கவில்லை? சுயமரியாதைக்காரர் சொன்னால் அது தவறு. அதை எதிர்க்க வேண்டுமா? ’பெரியாரும் தோழர் அண்ணுத்துரையும்' இராமாயணம் படிக்கவில்லை என்று சொல்லி விட்டார்களாம் இப்புலவர்கள். ஆகையினால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று இந்தப் புலவர்கள் கூறுகிறார்கள். பெரியார்களெல்லாம் அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள். தமக்கு அதிகம் தெரிந்ததாகக் கூறிக்கொள்ள மாட்டார்கள். பெரியாருக்குக் கம்பராமாயணம் தெரியாது என்று சொன்ன பாரதியாருக்கு வால்மீகி இராமாயணம் தெரியுமா என்று கேட்கிறேன்.

கலை போய் விடும் என்று கதகிறுறீர்கள். கலையென்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியவில்லை. தமிழ்க் கலை உயர்ந்ததாக இருக்க வேண்டுமானால் கலைக்குக் காரணமான எண்ணங்களும் உயர்ந்தவைகளாக இருக்க வேண்டும். இவ்விரண்டையும் பிரிக்க முடியாதே, இழிவான கதை, கலையானால் அக்கலை எப்படி உயர்ந்ததாகும்? கலை என்பது புலவன் உள்ளத்திலே தோன்றி மலரும் எழுச்சி (originality) அதைக் கற்பதுதான் கல்வி. கலை என்பது மூலம் உள்ள உணர்ச்சியை ஊட்டு வதுதான் கலை. இழிவான ஒழுக்கத்தைக் காட்டிடும் கதையுடைய கலையும் இழிவானதே. அதை ஒழிக்கத்தா வேண்டும். இக்காலத்தில் ஐந்தாம் படைவேலை செய்பவர்களைக் கண்டிக்கிறோமே, ஏன்?


கவிஞர் பேசுகிறார்