பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை என்றால் என்ன?

33


அந்த 5ம் படை வேலை செய்து தன் அண்ணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமா? இது தவிர நிறையப் பொய்கள். இராமன் பாணம் ஒன்று இரண்டு, ஆயிரம் லட்சமாய் விட்டதாம். அவன் அம்பறாத் தோணியில் இத்தனை அம்புகளும் எப்படி வைத்திருந்தான்? அஃது எவ்வளவு பெரியது? இந்த மாதிரியான பொய்களையே புலவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இந்தக் கேவலம் எங்கேனும் உண்டா? பெரிய புராணத்தில் கண்ணப்பன் பன்றியைக் கொன்று அதன் மாமிசத்தை மென்று ருசி பார்த்துச் சிவபிரானுக்குக் கொடுத்தானாம். எவ்வளவு அசிங்கம்? ஏன் இப்படி எழுதினான்? எழுதினவனுக்கு அந்த ஒழுக்கந்தான்; அவனுக்கு அந்தப் புத்திதான் வரும். சேக்கிழார் அந்த இழிந்த செயலுக்கு ஏற்றவன். இந்த ஆபாசங்களை எரிக்க வேண்டும் என்று சுயமரியாதைக்காரர் சொன்னால், அதற்குப் பெரிய புலவர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு எதிர்க்க வருகிறார்கள் சிலபுலவர்கள்.

ஐயா, ஒருவன் அசிங்கத்தில் கால் வைத்துக் கொண்டு நிற்கிறான், அதை மற்றொருவன் பார்த்துக் குறிப்பாகக்காட்டுகிறான். சீக்கிரம் போய்க்காலைக் கழுவிக் கொள்ளும்படி சொல்லுகிறான். ஆனால், அப்படியே அந்த அசிங்கம் பட்டு இருக்கிற தோற்றம் ஓர் அழகிய சித்திரம் போல் அமைந்து அதைக்கழுவாதே என்றார் பாரதியார் முதலிய பண்டிதர்கள்.


கவிஞர் பேசுகிறார்