பக்கம்:காணிக்கை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அவள் அழகை நான்.ரசிப்பதில் அவள் தனி இன்பம் கண்டாள். அது அவளுக்கே தெரியாது. அவள் கையில் ஒருநாள் மருதாணி வைத்திருந்தாள். அதை நான் பார்க்க வேண்டும் என்று விரும்பினள், தன் கைகளை எனக்குக் காட்டினள். 'இதோ பார்' என்ருள். 'வெறுங்கை' என்றேன். இல்லை; ®55ಕಿ சிவப்பு அழகாக இல்லையா. இதைக் காட்டவேண்டுமென்று நினைத்தேன்' என்ருள். அவள் அழகை நான் ரசிப்பதற்கு இடம் கொடுத் தாள். அவளை சிக்க இடம் மறுத்தாள். இதுதான் அந்தப் புதிய காதல் எ. பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு சாமியார் என் கடைக்கு வந்திருந்தார். அவர் இந்த உலகைத் துறந்துவிட்டேன் என்று கூறினர். அவ ருக்கு ஒரு மகள் இருந்தாள். சாமியாருக்கு எப்படி மகள் இருக்கமுடியும், இது புதிய கேள்விதான். அவள் பிறந்த பிறகுதான் அவர் சாமியாராகிவிட்டார். சின்னபோதே அவர் மனைவி இந்த உலக வாழ்வை நீத்துவிட்டார். அதற் கப்புறம் அவர் தனிமை வாழ்க்கையை நடத்தினர். அவர் எப்படி இந்த உலகில் பிழைக்க முடிந்தது. கைரேகை பார்ப்பதில் கெட்டிக்காரராக இருந்தார். அவர் பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படும் ஒரு சிலாைச் சுற்றி வருவார். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இருப் பது இல்லை. அடுத்த பதவி எப்பொழுது என்று சதா கவலை கொள்பவர்கள்தான் பெரிய மனிதர்கள். இப்பொழுது இந்த அய்யப்பன் சாமி பல இடங்களில் இடம் பிடித்துவிட்டது. கருப்புச் சட்டைக்காரர்களாகி விட்டார்கள். புதிய பக்தி. மது உண்ட மங்கையர்களைப் போல் அவர்கள் காட்சி அளிக்கிருர்கள். ஏதோ பாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/101&oldid=786810" இலிருந்து மீள்விக்கப்பட்டது