பக்கம்:காணிக்கை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. "அவர்களை மறந்து எத்தனையோ நாட்கள் ஆகின்றன. அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப்படாதபோது நான் ஏன் அவர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்" என்று கூறினர். - "ஏன் தகராரு?" என்று கேட்டாராம். "அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது இல்லை. அவர்கள் சமுதாய மனிதர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் சமுதா யத்துக்குக் கொடுக்க அதனிடமிருந்து பெற இருக்கிரு களே தவிரப் பெற்றேர்களை எதிர்பார்க்கவில்லை." "இதுவரை பெரிய பெரிய நீதிபதிகளைப் பார்த்து இருக் கிறேன். அதிகாரிகளைப் பார்த்து இருக்கிறேன். அவர்கள் சதா தம் பிள்ளைகளின் கவலையைப்பற்றித்தான் பேசு வார்கள். நீங்கள்' 'இன்னும் அவர்கள் குடும்பத்தலைவர்களாக இருக் கிருர்கள்." "நீங்கள்?" "சமுதாய மனிதன்' என்று கூறிவிட்டு "என் கவலை வாழ்க்கை இந்தச் சமுதாயத்தை ஒட்டியது" என்று கூறினராம். தனிமனிதன் தன்னைப் பற்றியே கவலைப்படும்போது தான் இந்த ஜோசியம் பக்தி முதலியன தலையெடுக் கின்றன என்பதை அந்தக் கவிஞன் அவரிடம் பேசிய பேச்சிலிருந்து தெரிந்துகொண்டேன். அடிக்கடி மது இந்தச் சமுதாய உணர்வைப்பற்றிப் பேசுவாள். அது அந்தக் கவிஞனிடம் முழுமை பெற்றி ருந்ததை என் ல்ை உணரமுடிந்தது. எனக்கும் இந்த மதுவின் பழக்கத்தால் இந்தச் சமு தாய உணர்வு என்ற பைத்தியம் கொஞ்சம் கொஞ்சம் தலைக்கேறிவிட்டது. அதனால்தான் என் மனைவியின் பிரிவை அவள் முரண்பாட்டை என் ல்ை தாங்கிக்கொள்ள முடிந்தது. அவளைத்தவிர நான் யாரிடமும் பழகக்கூடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/105&oldid=786814" இலிருந்து மீள்விக்கப்பட்டது