பக்கம்:காணிக்கை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 3 முரளி அடிபட்டது ஒரு பெரிய அதிாச்சியை உண்டு பண்ணிவிட்டது; எங்கள் வருங்காலம் அஸ்தமித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவன் இந்த நாட்டின் பொதுச் சொத்து; அதில் பத்மினி மட்டும் உரிமை கொண்டாட முடியாது; மதுவுக் கும் அவன் உறவாக விளங்கின்ை; அவள் அவனைப் பார்க்காமல் இருக்ககமாட்டாள். எந்த வன்முறையாளரால் அவள் வழி மறிக்கப் பட்டாளோ அவர்களாலேயே என் மகன் தாக்கப் பட்டான். இப்பொழுது இது ஒரு புதிய செயல் முறையாக மாறிவிட்டது. வீரம் என்பது நேருக்கு நேர் போர்செய்வது அதுதான் பழைய காலத்து வீரம். காந்தியடிகள் சத்தியாக்கிரகம் தொடங்கி வைத்தார். போராட்டம் வேண்டும்தான். கிளர்ச்சிகள் தேவைதான். இந்தக் கோழைத்தனம் தேவை இல்லை. தனிமனிதர் தவறுகள் இனத்தின் போராட்ட மாக மாறுவது வியப்பாக உள்ளது. ஒரு கண் டக்டர் தவறு செய்தால் அந்த இனமே அவருக்கு ஆதரவாகப் பின்னணி யில் நிற்கிறது; ஒரு மாணவன் தவறு செய்தால் ஒரு சமுதாயமே பின்னணியாக அமைகிறது; கூட்டுணர்ச்சி வேண்டியதுதான். தவறு செய்யும் பொழுது அவர் தனித்து தண்டிக்கத் தக்கவர் என்ற நியாயம் இந்தக் கூட்டு உணர்வால் மறைக்கப்படுகிறது. நாடு ஜனநாயகம் என்ற பாதையில் இப்பொழுதுதான் அடியெடுத்து வைக்கிறது. எதேச்சாதிகாரமும் எமர்ஜன் சி யும் சர்வாதிகாரமும் தனிமனிதர் ஆதிக்கமும் தலையோங்கி இருந்தன. அந்த நிலை மாறி மனித சுதந்திரத்துக்கும் உரிமைக் கிளர்ச்சிகளுக்கும் ஜனநாயகம் இடம் தந்தது; தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட மாற்றம் இது; எழுத்து சுதந் திரம் பேச்சு சுதந்திரம் மறுபடியும் கால் ஊன்றிக் கிளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/114&oldid=786824" இலிருந்து மீள்விக்கப்பட்டது