பக்கம்:காணிக்கை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114' துத் தழைத்து வளரும் நாளில் வன்முறைகள் வளர்கின்றன என்ருல் இது நினைத்துப்பார்க்க வேண்டிய ஒன்றுதானே. மறுபடியும் எமர்ஜன்சி வந்தால்மேல் என்று எண்ணக் கூடிய வகையில் வன்முறைச் செயல்கள் தலை யோங்குகின்றன. பல பேர் இப்படி நினைக்கிருர்கள். ஜன நாயகத்தில் நம்பிக்கை வைக்கும் நிலையில் இந்த வன்முறை கள் ஒரு சோதனையாக ஏற்பட்டுள்ளது. இந்த நினைவுகள் என் மகன் மண்டையில் பட்ட அடிகள் எழுப்பின. இவை பற்றி எண்ண எனக்குத் தெரியாது. மது இப்படி எல்லாம் பேசி அரசியல் சூழ்நிலைகளை விளக்கி இருக்கிருள். முன்னெல்லாம் வேலை நிறுத்தம் என்றல் வாக்குச் சிட்டு எடுத்துதான் முடிவு எடுத்தார்கள். பெரும்பான்மை யோர் அந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டால்தான் அந்த முடிவை எடுக்கிருர்கள். இப்பொழுது அப்படி இல்லை தலைவர்கள் ஒரு சிலர் முடிவு அவசரப்பட்டு எடுத்துவிடு கிருர்கள். அல்லது யாரோ ஒரு மூலையில் எங்கோ தொடங்கிவிடுகிறர்கள். வன்முறைகள் அதற்குப் பக்க பலமாக அமைகின்றன. தீப்பொறி பரவுவதைப் போலப் பரவுகிறது. கட்சிகள் மோதிக்கொள்கின்றன. மாணவர்களும் தொழிலாளிகளும் மோதிக்கொள்கின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களைத் தேர்வுகள் எழுதவேண்டாம் என்று கூறு கிருர்கள். மாணவர்கள் ஆசிரியர்களோடு மோதிக்கொள் கிருர்கள்; ஆசிரியர்கள் மானவர்களோடு மோதிக்கொள் கிருர்கள். "ஜனநாயகம் ஒரு பெரிய சோதனைக்கு உள்ளாகி, இருக்கிறது. முன் மது சொன்னது எல்லாம் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கையில் உறுதிப்பாடு இல்லை. இந்த நினைவுகள் தோன்றிய போது முரளியின் உடம்பு அவ்வளவு மோசமாக இல்லை. அதல்ை இந்தப் பொதுச் சூழ்நிலைகளை விமரிசிக்க முடிந்தது. எனக்குள் பேசிக் கொள்வேன்; சில சமயம் மது என் சிந்தனையைத் துண்டுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/115&oldid=786825" இலிருந்து மீள்விக்கப்பட்டது