பக்கம்:காணிக்கை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!13 வன்முறையும் அடக்குமுறையும்தான் இன்றைய அரசியல் என்று கூறினளே அதுதான் நினைவுக்கு வந்தது. மற்றென்று மறந்துவிட்டேன். முரளியை மருத்துவ மனைக்கு அழைத்து வந்ததே மாணிக்கம் என்ற இளைஞன் தான். அவன் ஏதோ கல்லூரி மாணவன்தான் என்று தெரிந்தது. கையில் உண்டி'வைத்திருந்தான். அதாவது புயலுக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தான். நல்ல காலம் அவன் கவனித்து மருத்துவ உதவி செய்யவில்லை என்ருல் என் .கட்டோடு நான் பார்த்திருக்க முடியாது في عهم 'யார் அடித்திருப்பார்கள்?" "மாணவன்" ஒருவேளை அவனே அடித்துவிட்டு மனம் தாளாமல் கொண்டு வந்து சேர்த்திருப்பான? என் ல்ை முடிவு செய்ய முடியவில்லை. மறுபடியும் மது சொன்ன சொற்கள் என் நினைவுக்கு வந்தன. 'ஆக்கச் செயலில் ஈடுபடுபவருக்கு அழிவுச் செயல் தெரியாது." . நிச்சயம் மாணிக்கம் இதைச் செய்திருக்கமாட்டான். மாணவர்கள் இந்தத் தவறைச் செய்யமாட்டார்கள். 'முரளி அவர்களுக்கு என்ன பகையா? இல்லே இந்தச் சமுதாயம் பகையாகக் காணப்படுகிறது. 'முரளியும் அதன் ஒரு பகுதி தானே. என்னமோ இப்படி எல்லாம் எனக்கு நினைக்கத் தோன்றின. அடக்கு முறைகள் வளர்கின்றன. அதற்குக் காரணம் என்ன? மது குறிப்பிட்ட வன்முறைதானே. ஒவ்வொருவரும் தாம் வலிவுள்ளவர்கள் என்று காட்டிக்கொள்ள வன்முறையிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறர்கள். யார் வலிமை உடையவர்கள். நிச்சயம் அரசுதான் வலிவு உடையது. சட்டம் வலிமை மிக்கது. அதுதான் வெல்கிறது. இதை அடக்குமுறை என்று சொல்லுகிறர்கள். வேறு அரசாங்கம் என்ன செய்யும். கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண் டிருக்குமா! நிச்சயம் அரசாங்கத்தின் கரம் ஓங்கித்தான் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/116&oldid=786826" இலிருந்து மீள்விக்கப்பட்டது