பக்கம்:காணிக்கை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இந்த நாட்டில் வன்முறை கூடாது. அதைத் தாங்கும் நிலை இல்லை. அதிலே வளர்ச்சி இருக்கிறது என்ருல் எப் பொழுதோ வன்முறையாளர்கள் வெற்றி பெற்றிருப்பார் கள். அவரவர் தம் கோரிக்கைகளுக்காகத்தான் போராடு, கிருர்கள். நாட்டின் பொது வளர்ச்சிக்கு எந்தப் போராட்ட மும் நடைபெறவில்லை. எனக்குக் காந்தியடிகள் சிலைதான் கண்முன் நின்றது. நீ ஒருவன் தான் இந்த நாட்டில் வன்முறையை ஒழிக்க முடியும் என்று நினைப்பேன். ஏன் அவரையே வன்முறை பலி வாங்கிக் கொண்டது என்ருள். அவர் என்ன செய்யமுடியும். துப்பாக்கிமுனை தானே அவரை முடித்துத் தீர்த்தது. காந்தீயம் அந்த வெடிச்சத்தத்திலேயே மறைந்து விட்டது. அன்று காந்தி யடிகளுக்கே தற்காப்புத்தர முடியாமல் போய்விட்டது. முரளி என்ன சாதாரண குடிமகன்தானே. அவன் குடி மகன் கூட இல்லையே இந்த உலகில் வாழலாம் வாழமுடி யும் என்ற நம்பிக்கையில் வளர்ந்து வரும் எதிர் காலக் குடிமகன். அவனுக்கு எவ்வளவு அழகான கற்பனைகளே அமைத் துக் கொண்டிருந்தோம். 'அம்மா பைத்தியம்' என்பான். என்னிடம் அவள் எண்ணிப்பார்க்காமல் சண்டை போடுவதால். "அப்பா நி பைத்தியம் என்பான்." நான் அவன் அம்மா பேச்சு கேட்பதால். "கல்லெறிந்ததால் பைத்தியம்' அவன் கண்டபடி எறிந்ததால் என் றன். "நான் சொல்கிறேன். முரளி நீதான் பைத்தியம். இந்த உலகத்தில் பிறந்தாயே" என்று என்னையும் அறியாமல் துக்கம் தாளாமல் பேசுவேன். மதுவும் ஒரு பைத்தியம்தான், நான் அவளுக்கு உதவி னேன் என்பதால்-என்னைச் சுற்றிக்கொண்டு இருந்தாள். இப்பொழுது இந்தக் குடும்பத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/117&oldid=786827" இலிருந்து மீள்விக்கப்பட்டது